இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.08 ஆக உள்ளது. துருக்கியில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

நேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.62 ஆக இருந்தது. மேலும் வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது 70 ரூபாயை தொட்டது இறக்குமதி தொழிலில் இருப்பவர்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது