பெண்களிடம் வரம்பு மீறி நடந்து, ரவுடித்தனத்தில் ஈடுபடுவோர் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
செல்வக்குமார் சத்யா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். செல்வக்குமார் – சத்யா இடையேயான கொடுக்கல் வாங்கல் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இந்நிலையில் சத்யா பெரம்பலூர் பிரபாகரன் என்பவருடனும் நட்பு ஏற்பட்டு அவருடனும் தொடர்பில் இருந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து செல்வகுமார் கண்டித்தும் சத்யா கேட்க மறுத்ததால் செல்வகுமார் சரமாரியாக தாக்கியுள்ளார்.
ஆனாலும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்து புகார் கொடுத்தும் போலிசார் எந்த நடவடிக்கை எடுக்கவும் இல்லை .அந்த நிகழ்வே தற்போது வைரலாக பரவி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.
இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திமுகவினர் மத்தியிலும் இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அவர்கள் மத்தியிலும் தாக்கிய திமுக பிரமுகரை திமுகவில் இருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது இதனை அடுத்து பெரம்பலூர் திமுக நிர்வாகி செல்வகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள தகவலில், தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு-வெறுப்புகள் இவற்றின் காரணமாக அடாவடியாக செயல்படும் போக்கினை தி.மு.க. அனுமதிக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரவுடித்தனமாக செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுபவர் யாராக இருந்தாலும், கட்சி விதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தாக்கப்படட பெண் புகார் அளித்த 4 மாதம் ஆகியும் காவல்துறை என்ன செய்து கொண்டு இருந்தது என்ற கேள்வியும் சமூக வலை தளத்தில் எழுந்துள்ளது ..
மேலும் பெண்னை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுகவை மேற்கோள் காட்டி ஆனால் மூன்று விவசாய கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்ததில் அதிமுகவினருக்கு வழக்கு செலவு ஏற்று இன்னமும் நடத்தி கொண்டு இருக்கும் அதிமுக நிலையும் ஒப்பிட்டு சமூக பதிவர்கள் பெருவாரியாக கண்டித்து வருகின்றனர் ..
அது என்ன தர்மபுரி பேருந்து வழக்கு என்று தெரிய விரும்புவர்கள் மேற்கொண்டு படிக்கவும்
கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, கொடைக்கானல் “பிளசன்ட் ஸ்டே’ ஓட்டல் வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தனி கோர்ட் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இது, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் போராட்டத்தில் எடுப்பட்டனர் .
அப்போது, தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டியில், கோவை விவசாய பல்கலைக்கழக மாணவியர் சுற்றுலா வந்த பஸ்சுக்கு, போராட்டக்காரர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பஸ்சில் இருந்த மாணவியர் 44 பேர் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு பேரும் ஜன்னல் வழியாகவும், கண்ணாடிகளை உடைத்தும் வெளியேறினர்.
ஆனால் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மாணவியர் மட்டும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் தீயில் எரிந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தர்மபுரி டவுன் போலீசார் இந்த வழக்கை விசாரித்து, தர்மபுரியைச் சேர்ந்த மாது என்ற ரவீந்திரன், நெடு என்ற நெடுஞ்செழியன், கொட்டப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் முனியப்பன், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், டெய்லர் மணி உட்பட 31 பேரை கைது செய்தனர்.முதலில், கிருஷ்ணகிரி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.
இதன் தீர்ப்பில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அ.தி.மு.க., கட்சியைச் சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
மூன்று பேர் மீது பஸ்சை எரித்தது, மூன்று மாணவிகளை கொலை செய்தது மற்றும் 46 பேரை கொலை செய்ய முயற்சி செய்தது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என பிப் 16, 2007 தீர்ப்பு கூறிய சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட் நீதிபதி கிருஷ்ணராஜா, இவர்களின் தண்டனையாக தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு ஆகிய முவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கியது என்பதும் குறிப்பிடதக்கது ..
தண்டனை பெற்றவர்கள் அ.தி.மு.க.,வில் வகித்த பதவிகள் விவரம் : தர்மபுரி இலக்கியம்பட்டியில் வேளாண் கல்லூரி மாணவியர் வந்த பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வகித்த பதவிகள் விவரம் வருமாறு:தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகள் விவரம் மற்றும் சம்பவம் நடந்த போது, அ.தி.மு.க.,வில் வகித்த பதவிகள் விவரம்:முனியப்பன் காட்டம்பட்டி ஊராட்சி தலைவர் அ.தி.மு.க., கிளை நிர்வாகி. (வழக்கில் நான்காவது குற்றவாளி) நெடு என்கிற நெடுஞ்செழியன் தர்மபுரி மூன்றாவது வார்டு செயலர் (வழக்கில் இரண்டாவது குற்றவாளி), மாது என்கிற ரவீந்திரன் நகர அ.தி.மு.க., இளைஞரணி செயலர். (வழக்கில் மூன்றாவது குற்றவாளி).
இரு ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் விவரம் மற்றும் சம்பவம் நடந்த போது வகித்த பதவிகள்:
ராஜேந்திரன் (வழக்கில் முதல் குற்றவாளி) – ஒன்றிய செயலர் மற்றும் இலக்கியம்பட்டி ஊராட்சி தலைவர்.
முருகன் (எம்.ஜி.ஆர்., மன்ற நகர செயலர்), தாவூத் பாஷா (சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட இணை செயலர்).
வேலாயுதம் (அ.தி.மு.க., உறுப்பினர்), முத்து என்கிற அறிவழகன் (33வது வார்டு செயலர்), ரவி (ஒன்பதாவது வார்டு செயலர்), முருகன் (தர்மபுரி யூனியன் மாணவர் அணி செயலர்), ஏ.பி.முருகன் (அ.தி.மு.க., பிரமுகர்), வடிவேல் (முன்னாள் தர்மபுரி நகர செயலர்).
சம்பத் (பழைய தர்மபுரி முன்னாள் ஊராட்சி தலைவர்), நஞ்சன், பழனிசாமி, ராஜு (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), டெய்லர் மணி (தர்மபுரி ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர், இவர் வழக்கு நடக்கும்போதே இறந்து விட்டார்), ஆத்துமேடு மாது (கிளைச் செயலர்).
ராமன் (அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு உறுப்பினர்), டிராக்டர் சண்முகம், சந்திரன் (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), செல்லகுட்டி (அண்ணாநகர் கிளை செயலர்), காவேரி மேஸ்திரி, மணி (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), மாதையன் (கிளை செயலர்), செல்வம், மாதேஸ், செல்வராஜ், மாணிக்கம் (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), வீரமணி (மாணவர் அணி தலைவர், கடந்தாண்டு அ.தி.மு.க., கோஷ்டிப் பூசலில் கொலை செய்யப்பட்டவர்), உதயகுமார் (அ.தி.மு.க., உறுப்பினர்).