தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் ((Integrated Child Development Services, Tamilnadu) கீழ் ஒப்பந்தகால அடிப்படையிலான பணியிடங்களான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (டெக்னிக்கல்), மாவட்ட திட்ட உதவியாளர், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 178
பணி மற்றும் காலியிடங்கள்:
பதவி: District Coordinators (Technical) – 06
சம்பளம்: மாதம் ரூ. 30,000
தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: District Project Assistants – 06
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்துயியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Block Coordinators (Technical) – 83
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Block Project Assistants – 83
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், கணினியை கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும், வட்டார அளவிலான பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2018 @ 5.45 pm
விண்ணப்பிக்கும் முறை: தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் (Integrated Child Development Services, Tamilnadu) என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து – இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், எண்: 6, பம்மல் நல்லதம்பி தெரு, எம்.ஜி.ஆர். சாலை, தரமணி, சென்னை – 600 113. – என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய…