தமிழக அரசின் பால்வளத்துறைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளையில் காலியாக உள்ள துணை மேலாளர், மூத்த தொழிற்சாலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
1. பணி : Deputy Manager (Dairying) – 01
கல்வித் தகுதி : ஐடிடி, என்.டி.டி அல்லது பால் அறிவியல், பால்வளம் போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.35,900 – ரூ.1,13,500
2. பணி : Deputy Manager (DE) – 02
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற ஏதேனும் ஓர் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.35,900 – ரூ.1,13,500
3. பணி : Executive Lab – 01
கல்வித் தகுதி : அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், அரசு வழங்கும் 2 ஆண்டு டிப்ளோமா இன் லேப் (டெக்னீசியன்) முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.20,000 – ரூ.63,600
4. பணி : LVD – 03
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநராகக் குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,500 – ரூ.62,000
5. பணி : Senior Factory Assistant – 24
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 – ரூ.50,000
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.09.2019 @ 5.00pm
விண்ணப்பிக்கும் முறை : AAVIN (ஆவின்) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் விண்ணப்ப உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட்டு – The Vellore – Thiruvannamalai District Co.Operative Milk Prodeucers Union Ltd., C-1325 No.142, Arcot Road, Sathuvachari, Vellore – 632 009 – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ஓசி, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.250-ம், மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை காசோலையாக – ‘The General Manager, Villupuram -Cuddalore District Co -operative Milk Producers Union L td., Villupuram’ – என்ற பெயரில் இணைத்து அனுப்ப வேண்டும்.