அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்ப தற்காகவும் மா.செ.க்கள் மற்றும் கட்சியின் சீனியர்களுடன் 17-ந் தேதி மாலையில் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தி னார் பழனிச்சாமி. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படி வேட்பாளர்களை தேர்வுசெய்திருந்த எடப்பாடி, அதனை வாசிக்க, மா.செ.க்கள் பலரும் சிபாரிசு செய்திருந்த நபர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததால் கோபம் கொப்பளித்தது.
 
“யோவ் இது லிஸ்ட்டே இல்லை. எங்களது சிபாரிசுகளைவிட உளவுத்துறை சிபாரிசுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பீங்களா?” என மசெக்கள் எகிற சூடு பிடித்தது .. 
 
மதுரையை முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசனுக்கு தர வேண்டுமென அமைச்சர்கள் உதயக்குமார், செல்லுர்ராஜு மற்றும் 4 எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசு செய்தனர்.
 
அப்போது கோபத்துடன் முஷ்டியை முடக்கிய ராஜன்செல்லப்பா, “”என் மகனுக்குத்தான் (ராஜ்சத்யன்) கொடுக்க வேண்டும். இல்லைன்னா இங்கு நடக் கிறதே வேற”’என மல்லுக்கட்டினார்.
 
கெட்ட தடித்த வார்த்தைகளையும் பயன்படுத்த, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் செய்வதறியாது திகைத்தனர்.
 
ஒரு கட்டத்தில் அவரை சமாதன படுத்த முயன்றனர் ஆனாலும் பொறுமையிழந்த ராஜன்செல்லப்பா, “”உன் மகனுக்கு சீட் வாங்கிட்ட தைரியத்துல நீ பேசற? உங்க மகனுக்கு சீட் வேணாம்னு சொல்லுங்க. நானும் கேட்கலை” என ஓ.பி.எஸ்.ஸிடம் ஆவேசம் காட்ட, அமைதிப் படுத்த கடுமையாக முயற்சித்தார் எடப்பாடி.
 
ஆனால் அவரிடமும் எகிறினார் ராஜன் செல்லப்பா. இதனார் அமைச்சர் உதயக்குமாருக்கும் ராஜன்செல்லப்பாவுக்கும் அடிதடி நடக்குமளவுக்கு மோதல் வெடித்தது. 
 
திருவண்ணாமலையை முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ண மூர்த்திக்கு ஒதுக்குவதாக எடப்பாடி சொல்ல, இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், “சீட்டு களை விலைக்கு விற்காதீர்கள்’ எனவும் கோஷமிட்டனர். “ கொலைக்காரன் அக்ரிக்கு ஒதுக்கினால் நாங்கள் ராஜினாமா செய்வோம்’ என மா.செ.க்கள் மிரட்டியும் பார்த்தார்கள். ஆனாலும் அக்ரிக் குத்தான் டிக் அடித்தனர் எடப்பாடியும் ஓ.பி.எஸ். ஸும்.
 
வடசென்னை தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்த சிட்டிங் எம்.பி. வெங்கடேஷ்பாபு, அத்தொகுதி தே.மு.தி.க. வுக்கு ஒதுக்கப்பட, “”என் தொகுதியை என்னிடம் விவாதிக்காமல் கூட்டணி கட்சிக்கு எப்படி ஒதுக்க லாம்” என மல்லுக்கட்டி னார். ஆனாலும் அவரது சொல் செல்லுபடியாக வில்லை.
 
 “”இப்படி அ.தி.மு.க.வின் பெரும்பாலான தொகுதிகளில் மோதல் வெடிக்க, 5 மணி நேரம் ஆலோசனை நடத்தியும் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் எடப்பாடி யும் ஓ.பி.எஸ்.ஸும் முகத்தை தொங்க போட்டு கட்சி தலைமையகத்தைவிட்டு இரவு 10 மணிக்கு வெளியேறினார்கள்.
 
தனது வீட்டில் ஓ.பி.எஸ். மற்றும் மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி விவாதிக்க, மதுரையை மட்டும் சேஞ்ச் பண்ணி, ராஜன்செல் லப்பா மகனுக்கு கொடுத்துட்டு மற்றபடி அப்படியே ரிலீஸ் செய் திடலாம் என முடிவெடுத்தனர்.
 
இதனால் தான் , வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி அறிவிக்காமல், தலைமைக்கழக நிர்வாகி மூலம் பட்டியலை ரிலீஸ் செய்ய வைத்தார் எடப்பாடி. அ.தி.மு.க.வின் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு கள் இருந்த நிலையில், அதனை மாற்றியமைக் காமல் அப்படியே ரிலீஸ் செய்யப்பட்டிருப்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் கொந்தளிப்புகள் உருவாகி யுள்ளது” என்கிறார்கள் காட்டமாக!
 
குடும்ப அரசியலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட அ.தி. மு.க.வில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன், பி.ஹெச். பாண்டியன் மகன் மனோஜ்பாண்டியன் ஆகிய 4 பேர் சீட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இது அதிமுக தொண்டரகளை சோர்வடைய செய்து உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன