சவுதி அரேபியாவின் தலைமையில் ஈரான், ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகள், பெட்ரோல் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதைத் தடுக்க, அதன் உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்த கூட்டமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப், அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பெட்ரோல் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பெட்ரோலியத்துறை அமைச்சர்களின் கூட்டம் ஞாயிறன்று அல்ஜீரியா நாட்டில் உள்ள அல்ஜீயர்ஸ் நகரில் (( Algiers)) நடைபெற்றது.
ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில் பேசிய சவுதி அரேபியாவின் பெட்ரோலியத்துறை அமைச்சர் காலித் அல் ஃபாலி, பெட்ரோலியப் பொருள்களின் விலையை சுத்திகரிக்கும் நிறுவனங்கள்தான் நிர்ணயிப்பதாக விளக்கமளித்தார். விலை உயர்வுக்கு தாங்கள் காரணமல்ல என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியதை, ரஷ்யா மற்றும் பெட்ரோல் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது அமெரிக்காவை அதிரிச்சியில் ஆழ்த்தி இருந்தது
இந்த நிலையில் அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொதுச் சபை கூட்டம் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் பல்வேறு உலகத் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்கள். இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்து கொண்டார்.
அப்போது ட்ரம்ப் தன்னுடைய உரையின் பொழுது தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு மற்ற அதிபர்களின் பதவிக்காலத்தை விட அமெரிக்கா அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். அப்போது அவையில் இருந்த சில உலகத் தலைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சிரித்து விட்டனர்.
இதைச் சற்றும் எதிர்பாராத ட்ரம்ப் , ‘நான் இந்த எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை’ என்று கூறி விட்டு அவர்களுடன் சேர்ந்து சிரித்து சமாளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்பொது இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஐ.நா சபை உரையின் பொழுது தலைவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை; என்னுடன் சேர்ந்தே சிரித்தார்கள்’ என்று கூறி விட்டு அடுத்த கேள்விக்கு நகர்ந்தார்.