ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்காய்டோ தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.மின்சாரம் பாதிக்கபட்டதால் 30 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்தும் வருகின்றனர்
மேலும் அந்த பகுதியில் Tomari அனுசக்தி நிலையத்துக்கு வழங்கும் மின்சாரமும் நிறுத்தபட்டுள்ளது எனவும் ஆனால் மின்சாரம் இல்லை என்றாலும் அந்த அனுசக்தி தளம் ஒரு வாரம் இயங்கும் என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர் .
நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர், படுகாயமடைந்துள்ளனர். உயிர்ச்தேசம் குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜப்பானில் ஜெபி புயல் ஏற்படுத்திய வடுக்கள் மறைவதற்கு முன்னரே, மற்றொரு இயற்கை சீற்றம், அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.