தேர்தல் ஆணையத்திடம் பாஜக சமர்ப்பித்த செலவின கணக்குகளின் ஆதாரத்தோடு பெற்ற தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே சீன நிறுவனங்களுடன் பாஜக கைகோர்த்து தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதை கண்டுபிடித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான சாகேத் கோகலே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றப்பட்ட தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், 2019 மக்களவைத் தேர்தலில், சீன அரசுடன் தொடர்புடைய ஆன்லைன் நிறுவனங்களுக்கு, தங்கள் 2019 தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவதற்காக பாஜக 1.15கோடி செலுத்தியது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் விதமாக செயல்படுவதாகவும், இந்திய மக்கள் பற்றிய தரவுகளை சீன ராணுவத்துடன் பகிர்வதாகவும் குற்றம் சாட்டி தடை செய்யப்பட்ட 59 செயலிகளில் ஷேர் இட், யு.சி.பிரௌசர், டென்சென்ட் ஆகிய செயலிகளை தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக ஒப்பந்தம் செய்திருந்தது அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
In July, Modi govt banned 59 Chinese apps. It also claimed that some of them have deep links with the Chinese Govt & People's Liberation Army (PLA).
The companies alleged by Modi govt to be close to China include: ShareIT, UC Web Browser, & Tencent.
(1/11)
— Saket Gokhale (@SaketGokhale) August 4, 2020
இதில், இணையத்தளம் வாயிலாக விளம்பரம் செய்ய சீன நிறுவனங்களான அலிபாபா நிறுவனத்திற்கு சொந்தமான யு.சி. பிரௌசர், காமா கானா, டென்சென்ட் ஆகிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கியதாக கணக்கு தாக்கல் செய்திருக்கிறது.
தற்போது இந்த தகவல் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீன அரசுடன் தொடர்புடைய இந்த நிறுவனங்களுடன் பாஜக ஒப்பந்தம் செய்திருந்த காரணத்தால் தான் சீனா குறித்து பிரதமர் வாய் திறக்க மறுப்பதாக அரசியல் கட்சியினர் உட்பட பலரும் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர்.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காகவே சீனாவுடன் மோதல் போக்கு கடைபிடிக்கப்படுவதாகவும், ஆனால் இதே சீன நிறுவனங்கள் தான் டிரம்பின் வெற்றிக்காக உழைத்து வருவதாகவும் அமெரிக்க அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், மோடி தலைமையில் செயல்படும் பாஜக அரசு 2019 தேர்தல் வெற்றிக்கு சீன நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
PS: Here’s a link to the truncated BJP expenditure report file for whoever wants to check and verify the source:https://t.co/VojkDIF5eV
— Saket Gokhale (@SaketGokhale) August 4, 2020
மேலும் வாசிக்க: இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்ட பாகிஸ்தான்…