முதல்வர் பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழக அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ.26 கோடி முதல் ரூ.36 கோடி வரை செலவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நெடுஞ்சாலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாலை மதிப்பீடு அதிகம் அல்ல எனவும் நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தான் அரசு ஒப்பந்தங்களை அளிக்கக்கூடாது எனவும் மனைவி, மகன், மகள்களை தான் நெருங்கிய உறவினர்களாக கருதமுடியும் என தமிழக அரசு சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் முதல்வரின் தூரத்து உறவினர்களுக்கு தான் வழங்கப்பட்டுள்ளன என்று நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல் வழக்கில் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ.26 கோடி முதல் ரூ.36 கோடி வரை செலவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது குறித்து கட்டிட நிபுணர்களிடம் கேட்ட போது இந்த அளவை வைத்து பார்க்கும் போது ஒரு மீட்டர்க்கு சுமார் 360000 ரூ என்பது மிகவும் அதிகமாகும் என்று தெறிவித்தனர்.
இந்த நிலையில் இப்படி வழக்கு போட்டு திமுக சாலை ஊழலை வெளிகொணர்ந்து குடைச்சல் தருவதை கண்டு பொறுக்க மட்டாமல் தமிழக முதல்வர் கடுப்பாகி பொது கூட்டத்தில் பேசிய பேச்சு சமூக வலைதளத்திலே வைரல் ஆகி வருகிறது அதில் அவர் பேசிய விவரம் வருமாறு :
” வேண்டுமென்றே திட்டமிட்டு, என் உறவினர் என்கிற ஒரே காரணத்திற்காக பொய் பேசுகிறார். அதுவும் உறவினர் என்றால், இரத்த சம்பந்தமான உறவு என்று, என்னுடைய அப்பா, அம்மா, நான், என்னுடைய மகன், என் பெண், என் மகனின் மனைவி, என் மகளின் கணவன், என்னுடைய அப்பா இரண்டாம்தாரம் கட்டியிருந்தால் அந்த அம்மா, அவர்களின் மகன், மகள், தத்தெடுத்திருந்தால் அந்த மகன், மகள் இவைகள்தான் பொருந்தும் என்று சட்டம் சொல்கிறது. இதுகூட தெரியாத மரமண்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் நாட்டிலே என்னய்யா பண்ண முடியும் ” என்று கேட்டுள்ளார் .
எதிர்கட்சி தலைவரை மரமண்டை என்று முதலவர் பேசியுள்ளதால் இது குறித்து பல தொலைகாட்சிகளிலும் இது இன்றைய விவாத பொருள் ஆகி உள்ளது ..