கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை சிகிச்சை பெற்று கோவா திரும்பினார்.
 
ஆனால் இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் கடந்த 2018 செப்டம்பர் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பரிக்கர் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
 
தொடர்ந்து சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல்வர்க்கான பணிகளை கவனித்துவந்தார். பாரிக்கரின் உடல் நிலை சனிக்கிழமை இரவு மிகவும் மோசமடைந்ததாக துணை சபாநாயகர் மைக்கேல் லோபா தெரிவித்திருந்தார்.
 
அதனைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மாலையில் முதலமைச்சர் அலுவலகம் தகவல் வெளியிட்டு இருந்தது.
 
இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் உள்ள மருத்துவமனையில் 63 வயதான மனோகர் பாரிக்கர் உயிர் பிரிந்தது.
 
மனோகர் பாரிக்கர் காலமானதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த அறிவித்தார்.
 
மனோகர் பாரிக்கர் இளம் வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். மும்பை ஐஐடியில் பட்டம் பெற்ற பாரிக்கர், பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 
 
1994-ம் ஆண்டு கோவா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையிலும் 2012 முதல் 2014-ம் ஆண்டு வரையிலும் கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் இருந்தார். கோவாவில் முதலில் காஸினோ ( சூதட்டவிடுதி)  2006 இல் மிக திவிரமாக எதிர்த்த போதும் பின்னர் இவரின் ஆட்சியில் காஸினோவை இவரின் ஆட்சியில் தொடர்வதை அனுமதித்து அது 6000  பேருக்கு வேலை வாய்ப்பை கோவா மக்களுக்கு தருகிறது என்று விளக்கம் அளித்தார்
 
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடி தலமையிலான அமைச்சரவையில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சரானார்.
 
தொடர்ந்து 2017-ம் ஆண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகி கோவா மாநில முதல்வரானார். இதனால், கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார். காங்கிரஸ் மிக வலுவான கட்சியாக இருந்த போதிலும் கோவாவில் இடங்களை பிடித்த  நிலையில் பாஜக கட்சி ஆட்சியை பிடித்தது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்த்தை பாஜகவுகு எதிராக ஈர்த்தது ..
 
முதல் முதலில் ஐஐடியில் படித்து முதல்வராக பணியாற்றியது மனோகர் பாரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவரின் மறைவுக்கு ,  “கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழப்பு செய்தி மிகவும் வருத்தம் அடைய செய்கிறது. பொது வாழ்வில் ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு கொண்டவர், கோவா மற்றும் இந்தியாவின் மக்களுக்கு அவருடைய சேவை மறக்கமுடியாதது” என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
 
“நமது பாதுகாப்பு மந்திரி என்ற பதவிக்கு ஸ்ரீ மனோகர் பாரிக்கருக்கு இந்தியா நித்திய நன்றியுடன் இருக்கும்.அவர் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்தபோது, இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தி, உள்நாட்டு பாதுகாப்பு தயாரிப்புகளை அதிகரித்து, முன்னாள் ராணுவத்தினரின் உயிர்களை காப்பாற்றுவதற்கான ஒரு தொடர்ச்சியான முடிவுகளை இந்தியா கண்டது “என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
 
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு ராகுல்காந்தி தனது இரங்கலில் ” தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது ” என தெரிவித்து உள்ளார்
 
“மனோகர் பாரிக்கரிடம் இருந்து தான் நிறைய கற்றுக் கொண்டதாக கூறினார். பாதுகாப்பு துறை அமைச்சராக பாரிக்கர் இருந்த போது அவரது பங்களிப்பில் இந்திய பாதுகாப்பு படை நவீனமடைந்ததாக ” பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா தெரிவித்து உள்ளார் .
 
“கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது; திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துகோள்கிறேன் ” என தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
 
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்,   நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய ரயில்வே அமைச்சர், பியூஸ் கோயல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாமக நிறுவனர் ராமதாஸ் ,இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.