குஜராத்தில் பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக 2 மணி நேரம் காத்திருந்து தண்ணீரை சேகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பல இடங்களில் ஏரிகளில் உள்ள நீர்மட்டம் குறைந்து சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோர்வாட் என்ற கிராமத்தில் வசிக்கும் பெண்கள் பகல் நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு இரவில் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்காக 2 மணி நேரம் காத்திருந்து தண்ணீரை சேகரித்து வீட்டிற்கு கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த கிராம பெண்கள் கூறிய விவரம் பின்வருமாறு நாங்கள் வசிக்கும் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. நாங்கள் பகலில் வேலைக்கு சென்று விட்டு இரவு தான் வீடு திரும்புவோம்.
இரவு வீடு திரும்பியதும் தண்ணீரை சேகரிக்க புறப்பட்டு விடுவோம். இரவு நேரத்தில் நெடுந்தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வருகிறோம்.
ஒரு குடம் தண்ணீருக்காக சுமார் 2 மணி நேரம் காத்து கொண்டிருக்க வேண்டி நிலை உள்ளது என தெரிவித்தனர்.
1995 ஆம் ஆண்டில் இருந்தே குஜராத் மாநிலத்தில் கடந்த 24 வருடமாக பாஜக ஆட்சியில் இருந்து வருவதும் மேலும் சென்ற முறை 2014 ஆட்சிக்கு வந்த மோடி வளர்ச்சி பெற்ற குஜ்ராத் போலவே தான் இந்தியாவை மாற்றி காட்டுவேன் என சூளுரைத்ததும் குறிப்பிடதக்கது