ஊழல் காரணமாக தண்டிக்கப்பட்டு முதல்வர் பதவியை 2001 ஆண்டில் இழந்த ஜெயலலிதா அப்போது சோழிகளை உருட்டிய நம்பூதிரிகள் பேச்சை கேட்டு மெரினாவில் இருந்த கண்ணகி சிலையை இரவோடு இரவாக தூக்கி தூர எரிந்தார்.
2011 ஆம் ஆண்டில் சவால் விட்டு மீண்டும் அதே இடத்தில் 2006 ஆம் ஆண்டில் நிறுவியதும் திமுக தான்.. கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தை கலைஞரின் பெயரை தூக்கி எறிந்துவிட்டு எம்ஜிஆர் நடத்திய ஆட்சியில்..
மீண்டும் முதல்வரானால் வள்ளுவர் கோட்டத்தில் தான் பதவி ஏற்பு என்று சூளுரைத்த கலைஞர்.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1989 ஆம் ஆண்டு அதே வள்ளுவர் கோட்டத்தில் கல்வெட்டை மீண்டும் நிறுவி பதவியேற்றதும் #திமுக தான்..
அண்ணா பிறந்தநாள் இன்று.. பத்தாண்டுகளுக்கு முன்பு அப்புறப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட சட்டமன்ற கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில்.. இதன் குறியீடு நாளை சட்டமன்றம் மீண்டும் செயல்படும் விரைவாக அதே இடத்தில்..
இந்தியாவில் எந்த கட்சிக்கும் இல்லாத பெருமை ஒரு கட்சிக்கு மட்டுமே உண்டு..
#திமுக ஆரம்பித்த 72 ஆண்டுகளில்..
23 ஆண்டுகள் மட்டுமே ஆண்ட கட்சி..
50 ஆண்டுகளாக எதிர்க்கட்சி..
காங்கிரசுடன் போராடியது 18 ஆண்டுகள்..
அதிமுகவுடன் போராடியது 30 ஆண்டுகள்.. மீதமுள்ள மூன்றாண்டுகள் ஆளுநருடன் போராட்டம்..
அதிகாரம் அல்ல கொள்கை சார் இயக்கம் மட்டுமே..
நினைத்ததை நிறைவேற்றும்..
சொன்னதை செயல்படுத்தும்..
அழித்தது உயிர்பெறும்..
கருவறுக்க துளிர்விடும்..
பெரியார் போட்ட பாதையில்..
அண்ணா காட்டிய வழியில்..
வெல்கவே..
புத்துணர்வு பெற்ற புதிய சட்டமன்ற கட்டிடம் மீண்டும் பிறக்கவே..
சவெரா 15-09-2021 18:30 HRS