ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்: பாதுகாப்பு முகவர் (Security Agent) – 68
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.03.2019 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.18,360
தேர்வு செய்யப்படும் முறை : உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்வார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஏர் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2019
விண்ணப்பிக்கும் முறை : ஏர் இந்தியா (Air India) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன்- “General Manager-Personnel, Air India Limited, Airlines House, St.Thomas Mount Post Office, Meenambakkam, Chennai – 600 016” -என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.