உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு 16 பேர் பலியாகினர். இந்நிலையில் கனமழையால் பலி எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழையால் ஷாஜகான்பூர் , அமேதி, ரேபரேலி ஆகிய பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ஜான்சி, எட்டவா, ரேபரேலி மற்றும் ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர் என அம்மாநில மீட்புப்பணி ஆணையாளர் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், சிட்டாபூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரிலுள்ள கங்கை ஆற்றில் அபாயகட்ட அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை குறித்து வெள்ள நிவாரண அதிகாரி விராஜ் குமார் கூறுகையில்; ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,000-க்கும் அதிகமானோர் பாதுகாப்பு முகமைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.
முன்னதாக கேரளாவில் பெருமழை எற்பட்டு 200 க்கு மேல இறந்த நிலையில் அய்யப்பன் கோவிலுக்கு வெள்ளம் வந்ததன் காரணம் உச்ச நீதிமன்றம் பெண்கள் அனுமதி தருவது குறித்து கூறிய கருத்துக்களே காரணம் என்று RSS அதரவாளர் குருமுர்த்தி மற்றும் பலர் கூறியதும் குறிப்பிடதக்கது..அந்த சமயத்தில் இயற்கை சீற்றம் தரும் நிகழ்வோடு ஆன்மிகத்தை இனைப்பது தவறு என்று பலரும் இதனை கண்டித்தனர்
இதனிடையே அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உச்சகட்ட உஷார் நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.