இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள் : 14,033
Junior Engineer – 13,034
Junior Engineer (Information Technology) – 49
Depot Material Superintennt – 456Chemical and Metallurgical Assistant – 494
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், பிரிண்டிங் டெக்னாலஜி மற்றும் அதனதன் துறை சார்ந்த துறைகளில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கும், இயற்பியல், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் கெமிக்கல்-மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 + இதர ஊதியம்.
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம்: பொதுப்பிரிவினர் கட்டணமாக ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019 @ 11.59pm
விண்ணப்பிக்கும் முறை: RAILWAY RECRUITMENT BOARD என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…