இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 29 டிரில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக ஆஸ்திரேலியா தூதர் தெரிவித்தார். இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.
 
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
 
மாநாடு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பின் இந்தியாவிற்கான ஆஸ்திரேலியா தூதர் சூசன் கிரஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள், வர்த்தகசபை பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள் உள்ளிட்ட 70 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
 
ஆஸ்திரேலியாவில் இந்தியப் பொருளாதார திட்டங்களில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்திய பொருளாதாரத்தின ஒரு வலுவான இருப்பிடமாக தமிழகம் உள்ளது.
 
ஆஸ்திரேலியா நிறுவனங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை தமிழ்நாடு வழங்குகிறது. அதே நேரம் ஆஸ்திரேலியா- இந்தியா என்று இரண்டு பக்கமும் இரு வழி மார்க்கத்தில் வர்த்தக தொடர்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு மட்டும் 29.1 டிரில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் நடத்துள்ளது.
 
இது கடந்த ஆண்டை விட 13 சதவித வளர்ச்சியாகும். ஆஸ்திரேலியாவின் பொருளாதார பங்குதாரர்களில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.
 
உட்கட்டமைப்பு, கல்வி, எரிசக்தி, வேளாண் தொழில்கள் இதில் அடக்கம். 2035 ம் ஆண்டில் இந்தியாவை முதல் மூன்று ஏற்றுமதி சந்தாரர்களுக்குள் கொண்டு வரும் நோக்கம் ஆஸ்திரேலியாவிடம் உள்ளது.
 
தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்த மாநாடு வர்த்தகம் மற்றும் தொழில் வாய்ப்புகளை வளர்க்கும் மாநாடாக உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 50 ஆஸ்திரேலிய கம்பெனிகள் உள்ளன. இதில் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படடு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.