தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மேலாளர், இணை மேலாளர், மூத்த தொழிற்சாலை அலுவலர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி மற்றும் காலிபணியிடங்கள்:
1. Manager (Accounts) – 01
கல்வித் தகுதி: CA inter, ICWA inter முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
2. Manager (Engineering) – 01
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் மின் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் கருவி, மின் மற்றும் கருவி, மின்னணுவியல் மற்றும் தொடர்பு, ஆட்டோமொபைல், எந்திரவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரையில்
3. Manager (Fooder) – 01
கல்வித் தகுதி: விவசாயப் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ. 36700 முதல் ரூ.1,16,200 வரையில்
4. Deputy Manager (Dairy) – 01
கல்வித் தகுதி: ஐடிடி/ என்டிடி அல்லது பால் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது எனவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ. 35,900 முதல் ரூ.1,13,500 வரையில்
5. Deputy Manager (DC) – 02
கல்வித் தகுதி: பால் அறிவியல், பால் வேதியியல், வேதியியல், உயிர் வேதியியல், பயோடெக், தரக் கட்டுப்பாடு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ. 35,600 முதல் ரூ.1,12,800 வரையில்
6. Executive (Office) – 09
கல்வித் தகுதி: முதுகலை பட்டம் பெற்று, கூட்டுறவுபால் சங்கத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில்
7. Private Secretary Grade III – 02
கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் உயர்நிலை மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.20,600 முதல் ரூ. 65,500 வரையில்
8. Executive (Lab) – 01
கல்வித் தகுதி: அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தொழிலக ஆய்வக பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.20,000 முதல் ரூ.63,600 வரையில்
9. Junior Executive (Typing) – 01
கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
விண்ணப்பக் கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்கள் ரூ.250, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2019 upto 5.45 pm
விண்ணப்பிக்கும் முறை: ஆவின் (AAVIN) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன்- General Manager, Madurai District Cooperative Milk Producers Union Limited, Sathamangalam, Madurai 625 020 – என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்..