சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகர் சித்தார்த். இந்த நிலையில் சித்தார்த்தின் டிவிட்டரில் சண்டை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆடிட்டர் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி போட்ட டுவிட்டிற்கு சித்தார்த் கோபத்துடன் பதில் டிவிட் போட சண்டை ஆரம்பமாகியிருக்கிறது.
குருமூர்த்தி தனது ட்விட்டரில், “26 வயதில் கோயங்காவுடன் எமெர்ஜென்சியை எதிர்த்த் போராடினேன். என்னை திட்டுபவர்கள் அப்போது பிறக்க கூட இல்லை. அம்பானி போலி ஆவணங்கள் தயாரித்து என்னை கைது செய்ய வைத்தார். போபர்ஸ் மற்றும் ஊழல் அரசியல் என்று தொடர்கிறது. போலி சமத்துவ வாதிகளும், போலி நவீனத்துவ வாதிகளும் என்னை வெறுப்பது எனக்கு பெருமையாக உள்ளது” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், “இந்த நாடு நீங்கள் பிறப்பதற்கு முன்பே வேற்றுமையில் ஒற்றுமையுள்ள ஜனநாயக நாடாக மாறி விட்டது என்று ஆரம்பித்து காட்டமான வார்த்தைகளால் பதிலளித்திருந்தார்.
இதற்கு முன்பும் அய்யப்பன் கோவில் விவகாரம் குறித்து குருமூர்த்தி ட்வீட் செய்ததற்கும் சித்தார்த் கோபம் காட்டியிருந்தார். “கடவுள் பழிவாங்கக்கூடியவர் இல்லை என நம்புபவர்களுக்கு தெரியும். ஆத்திகர்கள் கடவுள் இல்லை என்கிறார்கள். நீங்கள் பொருப்பில்லாமல், இப்படி தவறாக பேசுவதுதான் வருத்தமளிக்கிறது. கேரள வெள்ளம் தேசிய பேரிடர்” என டிவீட்டில் கூறியிருந்தார் சித்தார்த்.
Trackbacks/Pingbacks