கோவிலில் வைத்து தன் வகுப்பு தோழியுடன் சும்மா பேசிக் கொண்டிருந்த நான்காம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் படித்துவந்த மாணவர் கோகுல்ராஜை, சாதிக் கொழுப்பெடுத்த ஜாதி திமிரில் கொலைசெய்த கொலைகாரன் யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை சரியா..
கோகுல்ராஜ் வழக்கை விசாரித்த விஷ்ணுபிரியா டிஎஸ்பியை, ஜாதி மற்றும் அதிகாரத் திமிரில் இந்த யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் படுத்திய டார்ச்சர் இருக்கிறதே அதை சொல்லி மாளாது..
அப்போதைய ஆளும் அதிமுக கட்சியின் ஜாதி அதிகாரம் அவருக்கு எதிராக திரும்ப அவமானமும் இயலாமையும் சேர விஷ்ணுபிரியா டிஎஸ்பி தற்கொலை செய்து கொண்டார். அவரின் தந்தையார் பலமுறை போராடியும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்படவில்லை..
டிஎஸ்பி தற்கொலை பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்ப, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சிபிஐ என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்று சட்டமன்றத்தில் நக்கலாக கேட்ட நிகழ்வும் நடந்தது..
அதிமுக முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் ஜாதி பாசம் காரணமாக இந்த வழக்கை நீர்த்துப்போக ஆளும்கட்சி எவ்வளவோ முயன்றது..
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி அரசு சார்பில் ஆஜராகி, வழக்கை திறம்பட நடத்தி,
சாதிவெறி பிடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த மக்கள் வழக்கறிஞர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ப.பா.மோகன் அவர்களுக்கு 1000 நன்றிகளை இந்த நேரத்தில் சமத்துவம் தழைத்திட விரும்புவோர் வழங்கிட வேண்டும்.. இப்படியாக தாமதிக்கப்பட்டாலும் இறுதியாக நீதி வென்றது..
ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து பேருந்தை கொளுத்தி விவசாய கல்லூரி மாணவிகள் 4 பேரை எரித்துக் கொன்ற வழக்கில் 7 அதிமுகவினர் தப்பித்தது போலவே.. ஏதோ காரணமாக தப்பி விடுவார்களோ என்று எண்ணியிருந்த நேரத்தில், மூன்று ஆயுள் தண்டனை என்பது 100% சரியான தீர்ப்பு..
காரணம் கழுத்து மட்டும் வெட்டப்பட்டு கோகுல்ராஜ் கொடூரமாக கொலை செய்யப்படவில்லை.. கோகுல்ராஜ் நாக்கையும் அறுத்து சித்திரவதை செய்து துடிதுடிக்க மிகக் கேவலமாக கொலை செய்துள்ளார்கள் யுவராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகள்.. அத்தனையும் கால் காசு பெறாத பாழாய்ப்போன ஜாதியின் பெயரில்..
இந்த தீர்ப்பு இனியாவது ஜாதி திமிர் எடுத்து பேசித்திரியும் இளைஞர்களுக்கு, ஜாதி வெறி சமூகத்தை மட்டுமல்ல அதை நோக்கி பயணிக்க நினைப்பவர்களும் படுகுழியில் வீழ்த்தும் என்று ஒளிதரும் கலங்கரை விளக்காக கூகுள் ரூட் மேப் வழிகாட்டியாக இந்தத் தீர்ப்பு அமையும் என்பதால்.. மூன்று ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதிக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்..