நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த தர்மபிரபு படம் ஃபேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பப்பட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளியான படம் தர்மபிரபு. எமலோக கதையை மையமாக கொண்டு கொஞ்சம் அரசியலை கலந்து நகைச்சுவையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் முத்துக்குமரன்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் யோகி பாபு உடன் இணைந்து ரேகா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், ஜனனி ஐயர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். தமிழக அரசியலை கலாய்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இப்படம் தியேட்டரில் வெளியான உடனே தமிழ் ராக்கரஸில் வெளியானது. இந்நிலையில் இப்படம் தற்போது ஃபேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதற்கு முக்கிய காரணமாக படம் பாஜகவை விமர்சனம் செய்வது போன்று இருந்தது என்று கூறப்படுகிறது. பாஜகவிற்கு எதிரான படம் என்றும், எப்படி இப்படத்திற்கு சென்சார் குழு சான்றிதழ் வழங்கியது என்றும் பாஜகவினர் சில பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அவர்களில், யாரேனும், இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மீது வெறுப்பில் இது போன்று செய்துள்ளனர் என்று படக்குழு சந்தேகிக்கின்றனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது.
இதற்கிடையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தமிழகம் முழுவதும் நல்ல வசூல் ஈட்டியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தை விட அதிக வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.