வேளாண்மை சட்டங்களை பாராளுமன்றத்தில் முக்கியமாக ராஜ்யசபாவில் நிறைவேற்றிய விதமே உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக வழக்காக திமுக எம்பி சிவா உள்ளிட்ட பலர் தொடுக்க இந்திய தேசம் அதிர்ந்தது.

எதிர்க்கட்சி எம்பிக்களை நீக்கி முறையாக ஓட்டுக்களை பதிவு செய்யாமல் ராஜ்ய சபாவின் தலைவர் இந்திய துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தனது தலைமையை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடித்ததையும் நாடு பார்த்தது.

இதில் விவசாயிகளுக்கு துரோகம் செய்து மோடிக்கு ஜால்ரா அடித்த அதிமுக ராஜ்ய சபா எம்பிக்களின் பங்கு அளப்பரியது.. பாஜக என்ன சொன்னாலும் அதில் கையெழுத்து போடும் கேவலத்தை தொடர்ந்து செய்யும் அதிமுகவை தமிழக மக்கள் தொடர்ந்த அருவருப்புடன் பார்ப்பதால் தான் கடந்த மூன்று வருடமாக தேர்தல்களில் தொடர் தோல்வி அதிமுகவுக்கு..

ஒரு சட்டம் என்பது ஏதாவது ஒரு புள்ளிவிவர ஆவணத்தின் அடிப்படையில் தான் தான் சட்டம் ஆக்கப்பட வேண்டும். இதற்கு மிக முக்கிய உதாரணம் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தடைசெய்த 10.5 % உள் ஒதுக்கீடு..

நீதிமன்றங்கள் ஆதாரங்களை தரவுகளை தான் கேட்கின்றனர். ஆனால் 1931 ஆண்டுக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நிகழ்த்தப்படவில்லை என்பது சோகமான உண்மை..

ஆனாலும் ஒன்றியத்தில் 10% EWS உயர்சாதி ஒதுக்கீடுகள்.. மாநிலத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு ஜாதிக்கு மட்டும் 10.5% உள் ஒதுக்கீடுகள்.. ஆக தரவுகள் இல்லாமல் சட்டமாக்கப்பட்டதால் இரண்டுமே நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில்..

வேளாண்மை சட்டங்களும் அதுபோல எந்த தரவுகள் அடிப்படையிலும் நிறைவேற்றப்படவில்லை.. அதனால் அவை உச்சநீதிமன்றம் செல்ல இடைக்கால தடை விழுந்தது சட்டத்திற்கு.. அப்போதாவது விவசாயிகளை அழைத்து முறையாக பேசியிருக்க வேண்டும் செய்தார்களா பாஜகவினர் செய்யவில்லையே..

ஆனாலும் அதை வாபஸ் பெறும் போது விவசாயிகள் நன்மைக்காக தான் இதை செய்தேன் என்று வெட்கத்தை தொலைத்து இன்னமும் நீலிக் கண்ணீர் வடிக்கிறார் மாண்புமிகு மோடி..

என்ன நன்மை செய்தார் இந்த சட்டத்தின் மூலம்.. 702 பேர் ஒரு வருடமாக போராடி மரணம் அடைய வைத்திருப்பதுதான் திருவாளர் மோடி செய்த நன்மையா..

சரி போகட்டும் சட்டத்தைத் திரும்பப் பெறும்போது அப்படி இறந்த 700க்கும் மேற்பட்ட அவர்கள் குடும்பத்திற்கு ஏதாவது உதவிகளை அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டதா என்றாலும் அப்படியும் ஏதுமில்லை..

இந்திய பிரதமர் மோடியின் மனமாற்றத்திற்கு 702 பேர் உயிரை தர வேண்டும் என்றால், என்ன மாதிரி இந்திய பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம் என்ற நினைப்பு தோன்ற வருந்தாமல் இருக்க முடியவில்லை. எப்படி விட்டுவிட முடியும் போராடி இறந்த 700 பேரின் மரணங்களை ..

பஞ்சாப் காங்கிரஸ் அரசு விவசாயிகள் மரணத்தை கொலையாக வழக்கினை பதிவு செய்ய வேண்டும்.. அப்படி செய்தால் தான் 2024 ஆண்டில் ஆட்சி மாறியவுடன் இது மோடியை மற்றும் விவசாய சட்டத்தை இயற்றி அதற்கு உறுதுணையாக இருந்தவர்களை சிறைக்கு தள்ள பெரிதும் உதவும்..

பலரும் தேர்தல் காரணமாக மோடி பல்டி அடித்துவிட்டார் என்று வரும் பதிவுகளை சமூக வலைத்தளம் முழுவதும் நாம் பார்க்கிறோம்.. இது அரசியல் ரீதியான பார்வை ஆனாலும் மோடி தப்பிக்க ஆசைப்படும் இன்னொரு காரணமும் உண்டு..

பாஜக உள்துறை மந்திரி மகன் காரை மட்டும் ஏற்றி நாலு விவசாயிகளை கொல்லவில்லை.. மாறாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் என்பது தற்போது ஆதார பூர்வமாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்தப்படும் விசாரணையில் தெரியவந்துள்ளது..

இந்த செய்தியை திசைமாற்ற இப்படியாக குட்டிக்கரணம் பல்டி அடிக்கிறார் பாஜகவின் பிரதமர் மோடி.. சும்மாவா திரும்ப பெற்றார் மாண்புமிகு பாரதப் பிரதமர் திருவாளர் மோடி..

எல்லா வகையிலும் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள் இந்திய பிரதமர் மோடியின் மனமாற்றத்திற்கு 702 பேர் உயிரை தர வேண்டும் என்றால், என்ன மாதிரி இந்திய பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம் என்ற நினைப்பு தோன்ற வருந்தாமல் இருக்க முடியவில்லை..

ஆர் எஸ் எஸ் தனது paid social media fake accounts மற்றும் மீடியாக்களின் மூலம் வெயிலிலும் மழையிலும் உறைய வைக்கும் பனி குளிரிலும் கொடிய #கொரானா தாக்கத்திலும் உறுதியாக போராடிய பஞ்சாப் விவசாயிகளை..

தீவிரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்று சொல்லிப் பார்த்தார்கள் எதுவும் நடக்கவில்லை.. அமைதியாக போராடிய விவசாயிகள் மீது தடியடி ஏகப்பட்ட வழக்குகள் ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதுகள் அப்படியும் விவசாயிகள் வளைந்து கொடுக்கவில்லை..

தனது எல்லா அதிகாரத்தைப் பிரயோகித்து பின்னரும் எதுவும் செய்ய முடியவில்லை என்ற நிலையில், குட்டிக்கரணம் போட்டுக்கொண்டு தேசத்திற்கு மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டு கேவலமாக நாடகம் ஆடிக் கொண்டிருக்கும் காட்சியினை அமைதியாக நாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்..

மதத்தின் பெயரால் மோடி செய்துகொண்டிருக்கும் உச்சபட்ச அநியாயங்கள் காரணமாக, அவர் மட்டுமல்ல அவரை ஆதரிப்பவர்களும் தங்கள் இறுதி நாள் காலத்தில் மிக மோசமாக அனுபவிப்பார்களா என்றால் அதை அவர்கள் மனசாட்சியே முடிவு செய்யட்டும்..

இது எல்லாம் வயிறு எரிந்து மக்கள் கொடுக்கும் சாபமாக எண்ணிவிடாதீர்கள்.. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை செய்த அத்தனையிலும் தோல்வி..

அது பணமதிப்பிழப்பு #Demonetisation என்றாலும் அதிலும் நூற்றுக்கணக்கான மரணம் நடந்து பொருளாதாரம் மிக மோசமாக சரிந்தது.. அடுத்தது ஜிஎஸ்டி #GST வரிவிதிப்பு என்றாலும்.. #Makeinitaly பீட்சாவுக்கு 5% வரி #makeinindia கடலைமிட்டாய்க்கு 18 % என இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள்..

முஸ்லிம்களை குறிவைத்து தாக்கும் #CAA சட்டம் என்றாலும்.. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக போராடிய காலத்தில் டெல்லியில் அவர்கள்மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு நடத்திய கோரத் தாண்டவம் என்றாலும்..

அது இன்டர்நெட் சேவையை தடை செய்து பொருளாதாரத்தை சிதைத்து காஷ்மீர் மக்களை பாடாய்படுத்தும் #Article370 abrogation சட்டம் என்றாலும்..

ஆர்எஸ்எஸ் பாதுகாக்க துடிக்கும் ஒரு சாதிசூழ் கோச்சிங் சென்டரில் வருஷத்திற்கு 40,000 கோடிகள் சம்பாதிக்க மட்டுமே உதவும் #நீட் தேர்வு என்றாலும்..

கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் வரிப்பணத்தில் லாபத்தைத் தரும் பொதுத்துறையும் விற்று தின்று வருவதால் என்றாலும்.. வரி மேல் வரி விதித்து மக்களை சுரண்டி அதானி அம்பானிகள் மட்டும் ஆசியாவிலே டாப் 2 பணக்காரராக தற்போது நிறுவும் பாஜகவின் பொருளாதார கொள்கை என்றாலும்..

இந்தியாவின் எல்லைகளை சீனாவுக்கு தாரை வார்த்துக் கொண்டு அமைதியாக ஒன்றுமே நடக்காத போல நாடகமாடி வரும் நயவஞ்சக நடிகன் என்றாலும்..

ஒரு அரசு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் #பாஜக வின் ஒன்றிய அரசு
ஒன்றிய அரசை தலைமை ஏற்கும் பிரதமர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் திருவாளர் #மோடி..

இவ்வளவு அதிகாரம் இருந்தும் தான் நினைத்ததை செய்ய முடியவில்லை என்ற உணர்ச்சியே உணர்வே.
இனி பாஜகவின் பிரதமர் மோடியை கொஞ்சம் கொஞ்சமாக இதயத்தை அரித்து நிம்மதி இழந்து வாடச் செய்யும்..

காரணம் இயற்கை செயல்படும் தன்மை அதை இந்துக்கள் #கர்மா என்பார்கள்..
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு ‘Mills of god grind slow but sure’..
இதற்கு விளக்கம் இனி மதத்தின் பெயரால் ஆட்சி என்ற பெயரிலே அராஜகம் நடத்துவோர் அறிவார்கள்..

https://www.facebook.com/savenra/posts/7386186791407180