மத்திய அரசின் இந்திய பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பில் கிரேடு ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் இந்திய பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரேடு ஏ பதவிக்கு 147 காலியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, மே 31 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்: Officer Grade A (Assistant Manager)- 147
1. General – 80
2.Legal- 34
3. Information Technology- 22
4. Civil Engineering- 01
5. Electrical engineering- 04
6. Research- 05
7. Official language – 01

வயது வரம்பு: 29/2/2020 தேதியின் அதன்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ஓசி, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000-ம், மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31-05-2020

விண்ணப்பிக்கும் முறை : Securities and Exchange board of India என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…