இணைக்கப்பட்ட படத்தின் நிறுவனம் சென்னையில் 40க்கும் மேற்பட்ட கிளைகளை வைத்துள்ளன. இவற்றின் முதன்மை தயாரிப்பு சிக்கன் பிரியாணி தான்..

பலமுறை அசைவ பிரியாணி சாப்பிட்டு உள்ளதால் அதன் ருசிக்கு ஒப்புதல் வாக்குமூலம் தரத்தான் வேண்டியுள்ளது, வேறு வழி தெரியவில்லை..

இதில் முக்கிய விசேஷம் என்றால் ஓர் சாதி சூழ் ஒரே ஒரு வார்டு கவுன்சிலரை பெற்றுள்ள பாஜக இடத்தில் அமைந்துள்ள வெஸ்ட் மாம்பலம் கிளையில் தான் முக்கியமாக சிக்கன் பிரியாணிகள் அதிக விற்பனை ஆவதாக..

அப்படியாக பிரபல பிரியாணி கம்பெனி சோர்ஸ் சொல்லிய செவிவழி செய்தியால் பல பின்வரும் myths / போலி பிம்பங்கள் உடைபட்டுள்ளதை காண முடிகிறது..

  • வெஸ்ட் மாம்பல வாசிகள் அதிகமாக கோழி பிரியாணி சாப்பிடுவதால் அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பதில்லை..
  • பிரியாணியை முக்கியமாக சிக்கன் வகையறாவை அந்த ஒரு சாதி மக்கள் பெருவாரியாக சாப்பிடவேதில்லை..
  • பிரியாணி என்பது ஒரு மதத்தின் உணவு அல்லது ஒரு சாதியை தவிர்த்த உணவு மட்டுமே..
    நிற்க ..

இப்போது பல இடத்திலும் பிரியாணிகள் கிடைக்கின்றன ஏன் மக்களுக்கு இவைகளின் மீது கொள்ளை பிரியம் என்பதை அலசி ஆராய்ந்தால்..

முக்கியமாக பிரபல அசைவ பிரியாணி நிறுவனங்கள் மேற்கு #மாம்பலம் #மயிலாப்பூர் #நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் தங்கள் கிளைகளை பரப்பி தங்களது வியாபாரத்தை ஜரூராக செய்துகொண்டு வருவதையும் அலசி ஆராய்ந்தால்..

அதில் தெரியவருவது பிரியாணி இன்றைய வேகமான காலத்தில் சுலபமாக பத்து நிமிடத்தில் சாப்பிட்டு சென்றுவிடக் கூடிய உணவு.. சிக்கன் பிரியாணி சுமார் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கடைகளில் brand image என்ற அடிப்படையில் ஒரு பிளேட் கிடைப்பதால். .

மேலும் இரண்டு அசைவ பிரியாணியை வாங்கிக்கொண்டு மேலும் குஸ்கா மட்டுமே வாங்கி விட்டால் சுமார் ரூ 300-400 க்கள் ஒரு மத்தியதர குடும்பத்தின் மதிய உணவு தேவைகள் சுலபமாக முடிந்துவிடும்.. வீட்டில் உள்ள பெண்களுக்கும் வேலை பளு கிடையாது.. கிச்சனில் டிஷ் வாஷ் வேண்டும் என்ற தொல்லை இல்லை..

அது மட்டுமா அசைவ பிரியாணியில் கிட்டதட்ட அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. வேகவைத்த முட்டையுடன் கிடைக்கும் அசைவ பிளேட் பிரியாணியில் புரோட்டின்களும், கார்போஹைடிரேட்டுகளும் மற்றும் சில உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகளும் இருக்கிறது.

புரோட்டின்கள் உபயோகிக்கும் இறைச்சியில் இருந்தும், கார்போஹைட்ரட் அரிசியில் இருந்தும், கொழுப்புகள் எண்ணெய் மற்றும் நெய்யில் இருந்து கிடைக்கிறது. வெஜிடபிள் பிரியாணியாக இருந்தால் வைட்டமின்கள் காய்கறிகளில் இருந்து கிடைக்கும்.

அதோடு மட்டும் நின்று விடுவதில்லை பிரியாணி செரிமானத்தை அதிகரிக்கும். அதற்கு காரணம் அதிலுள்ள இஞ்சி, ஜீரகம் மற்றும் மஞ்சள் ஆகும். சீரகம் செரிமான நொதிகளின் செயல்பாட்டை விரைவாக்குகிறது, மேலும் கல்லீரலில் இருந்து பித்தத்தை வெளியேற்றுகிறது.

மஞ்சள் குடல் வீக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது, இஞ்சி வாயுவை வெளியேற்றுகிறது. அதுமட்டுமின்றி குமட்டல் ஏற்படுவதையும் தடுக்கிறது.

பிரியாணி நாம் சாப்பிடும் போது அதனுடன் கத்தரிக்காய் கூட்டு மற்றும் அறிந்த வெங்காயங்கள் தருவார்கள்.. இந்த வெங்காயத்தை பலரும் தனியாக சாப்பாட்டில் வைத்தால் சாப்பிடவே மாட்டார்கள்.. ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.. ஆனால் பிரியாணியுடன் வரும்போது அதையும் சேர்த்தே பலரும் உண்பார்கள்..

பிரியாணியில் அதிகம் உள்ள வெங்காயம், மஞ்சள், இஞ்சி, பட்டை, கிராம்பு மற்றும் பூண்டுடன் சேரும்போது, இயற்கையாகவே பிரியாணி உணவு புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது என்கிறது மருத்துவம் நமக்கு தரும் குறிப்பு..

அதில் முக்கியமாக இவற்றில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் பி6, ஆலிஸின், சல்பியூரிக் மூலக்கூறுகள் போன்றவை புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவை. இஞ்சி கீமோதெரபியை காட்டிலும் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது என்றும் சொல்கிறது மருத்துவம் நமக்கு தரும் குறிப்பு..

எந்த உணவும் அதிகமாக உண்டால் அது பாதிப்பை உண்டாக்கும்.. அது அடிக்கடி தயிர் சாதமாக இருந்தாலும் அது அடிக்கடி சாம்பார் சாதமாக இருந்தாலும்.. அதிகமாக சாப்பிட்டால் தயிர் சாதமும் சாம்பார் சாதமும் உடலுக்கு பல உபாதைகள் தந்து விடும் என்பதும் மறுக்கவே முடியாத உண்மைதான்..

இந்த அளவின்படி மருத்துவர்கள் நமக்கு பரிந்துரைப்பது வாரம் இரு முறைக்கு மேல பிரியாணி சாப்பிட வேண்டாம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.. ஆக இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்ட பிரியாணியை வாரம் இருமுறை வேண்டாம் என சொல்பவர்கள்..

வாழ்க்கையை வாழும் காலத்திலே ரசிக்க தெரியாமல் தொலைத்தவர்கள் எனவும் கொள்ளலாமா என்றால்..
இல்லை என மறுத்திட முடியாது..

போலி பிம்பங்கள் உடைபடும் போது ஒரு தெளிவு பிறக்கும் போது ஏற்படும் உணர்வு என்பது., ருசியான பிரியாணியை இதமான சூட்டில் எலும்புடன் ஒட்டிக்கொண்ட மெல்லிய சதை பாகங்களை நிதானமாக உமிழ்நீருடன் சுவைத்து சாப்பிடும்போது உணர்வது போன்றது..

அன்றைய காலத்தில் கூறப்பட்ட பழமொழி கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல..
இன்றைய காலகட்டத்தில் கூறப்படும் புதுமொழி அசைவ பிரியாணி கடை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நிதர்சனமாகி உள்ளதை யாவராலும் மறுக்கவே முடியாது..

ஆகவே வாரமிருமுறை உடல் நலத்துக்கு வலிமை தரும் வேக வைத்த முட்டையுடன் கூடிய சிக்கன் மட்டன் இத்தியாதி அசைவ பிரியாணி உணவை சாப்பிட்டு விட்டு.. உடல் நலத்தை அனைவரும் பேணுவோம்..

https://www.facebook.com/savenra/posts/8088655804493605