இராஜேஷ்குமார் என்றொரு திமுகவின் எம்பி வாழ்க கோஷம் அநாகரிகம் தானே கண்டிக்க மனமில்லையா.. எப்படி அவர் தமிழ்நாட்டின் மானத்தை இப்படி பாராளுமன்றத்தில் வாங்கலாம் என கேட்கும் நல்ல உள்ளங்களுக்கு..

அதே நாளில் டி.ஆர்.பாலு என்றொரு திமுக எம்பி தமிழ்நாடு மழை பேரிடர், விவசாயிகள் நலன் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார் அதே பாராளுமன்றத்தில்..

அதே நாளில் கதிர் ஆனந்த் என மற்றொரு திமுக எம்பி கொரோனா கொடுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 500 கோடி நிதியை ஒதுக்க வேண்டி தீர்மானம் போட முன்மொழிந்து இருக்கிறார் அதை பாராளுமன்றத்தில்..

கவனத்தில் கொள்ளப்படா அவைகள் காரணம் கோஷம்.. எப்படி அவை கோஷமாகி ஆகிவிட்டது என கண் மூடி ஒரு நிமிடம் ஆராய்ந்தால்..

அதுவும் அந்த திமுக எம்பி பதவியேற்றபோது சொன்ன நான்கு வார்த்தை வாழ்த்தை எப்படி கோஷம் என்று சொல்லலாம் என்றே ஓர் நிமிடம் ஆராய்ந்தால்.. வாழ்த்தா அவை அல்லவே கோஷம் மட்டுமே.. சொல்பவர் யார் என்று கூர்ந்து பார்த்தால்.. ஓ.ஓ.. வெங்கையா..

யாரிந்த வெங்கையா..ஒரு நிமிடம் ஆராய்ந்தால்..
ஓர் இரவில் செல்வி ஜெயலலிதா பிணத்தை வைத்துக் கொண்டு முறைப்படி தகனம் செய்யாமல்.. அடுத்த நாள் கூட காத்திருக்காமல் அன்றிரவே இறந்த செய்தி அறிவித்த இரண்டு மணி நேரத்தில் மொத்த அதிமுக அமைச்சரவையும், ஆளுநர் மாளிகைக்கு தரதரவென இழுத்துச் சென்று அவசரமாக பதவியேற்க செய்த நாகரீக நல் உள்ளம் தானே..

யாரிந்த வெங்கையா..
மந்திரியாக அதுவும் மோடி அரசரின் ஒன்றியத்தில் பவர்ஃபுள் மந்திரியாக இருந்த காலத்திலே.. 75 நாள் எந்த வேலையும் செய்யாமல் அப்பல்லோவில் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தவர் என சொன்னது நாமல்ல ஆட்சியதிகாரத்தில் அன்றிருந்த அதிமுகவினர்..

அதன்மூலம் சசிகலாவை அதிமுகவையும் கட்டுக்குள் வைத்திருந்த கண்ணியமிக்க ஜென்டில்மேன் தானே என்றும் சொன்னது நாமல்ல ஆட்சியதிகாரத்தில் அன்றிருந்த அதிமுகவினர்..

ஆக அப்படிப்பட்ட நாகரீக கண்ணியமிக்க வெங்கையா சொல்லிவிட்டால் மறுபேச்சு உண்டா.. ஆக நான்கு வார்த்தை வாழ்த்து தப்புத் தான்.. அநாகரிகம் தான், மானம் போனது போனதுதான்..

பரி நரியாவதும், நரி பரியாவதும் பாராளுமன்றத்திற்கு புதிதல்லவே.. பல #பாஜக எம்பிக்கள் #ஜெய்ஸ்ரீராம் என்ற பெயரில் பதவியேற்றபோது போட்ட கோஷம் பாராளுமன்றத்தில் வாழ்த்தாகிவிட்டதால்..

பல #அதிமுக எம்பிக்கள் #புரட்சித்தலைவர் என்றும் #புரட்சித்தலைவி என்ற பெயரிலே பதவியேற்றபோது போட்ட கோஷம் பாராளுமன்றத்தில் வாழ்த்தாகிவிட்டதால்..

மூத்த பாராளுமன்ற அதிமுக உறுப்பினர் ஒருவர் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் பாடலை பாடிவிட்டு ..
இது புரட்சித்தலைவர் பாடிய பாடல் என பூரிப்புடன் சொன்ன போது செல்லாத மானத்தை வாங்கிய செயல்கள் எல்லாவற்றையும் பாராளுமன்றத்தில் பூரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த வெங்கையா காலத்தில் வாழ்த்தாகிவிட்டதால்..

நான்கு வார்த்தை வாழ்த்து சொன்ன #திமுக எம்பியை ஏன் கோஷமிட்டீர்கள்.. பாராளுமன்றத்தின் மாண்பை புண்படுத்தி விட்டீர்களே.. தமிழ்நாட்டின் மானத்தை இப்படி வாங்கி விட்டீர்களே என்று உரிமைக்குரல் எடுத்து உரக்க உரைத்த வெங்கையா உடன் சேர்ந்து ஒழுக்கமுடன் மாண்பை உரைக்கும்..

ஒரு சாதி சூழ் மீடியா விகடன் தினமலர் தினமணி குமுதம் ரிப்போர்ட்டர் ஜூனியர் ரிப்போர்ட்டர் இத்தியாதிகளுடன் சேர்ந்து நாமும் கண்டிப்பது தானே முறை..

ஆக 75 நாள் நடந்த மர்மங்களை முறையாக #rss திட்டப்படி செய்த சாமர்த்தியசாலி ஒருவரின் பெயரில்.. கண்டித்து விடலாம் எப்படி எனது 4 வார்த்தை வாழ்த்தையை இப்படி கோஷம் என சொல்லலாம் என கண்டிக்காத அந்த திமுக எம்பியை..

https://www.facebook.com/savenra/posts/7443674978991694