பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited, Electronics Division, Bengaluru) நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் 320 டெக்னீசியன் தொழில்பழகுநர் பயிற்சிக்கு (Technician Apprentices- Diploma Holders) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 27 வயது, ஓபிசி பிரிவினருக்கு 30 வயது மற்றும் எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கட்ரானிக்ஸ், சிவில் போன்ற ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: தொழில்பழகுநர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2018

விண்ணப்பிக்கும் முறை: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited, Electronics Division, Bengaluru)என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் – DGM/HR, BHARAT HEAVY ELECTRICALS LIMITED, ELECTRONICS DIVISION, MYSURU ROAD, BENGALURU – 560 026 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…