ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து இன்று (நவம்பர் 17) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் 1000 கிலோ என சொல்லப்படும் கெட்டுப்போன இறைச்சி 12 பார்சல் பெட்டிகளில் கடத்தி வரப்பட்டது வந்த ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், உணவு பாதுகாப்புத்துறையின் அதிகாரிகளும் ஸ்பாட்டுக்கு வந்து இறைச்சியை கைப்பற்றினர். 
 
சில பெட்டிகளில இறைச்சி என்றும், வேறு சில பெட்டிகளில் மீன் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதிக துர்நாற்றம் வீசியதால்  கெட்டுப்போனது ஆட்டின் இறைச்சியா அல்லது நாய்க்கறியா எனச் சந்தேகம் வலுத்தது .. ஒரு அதிகாரி இறைச்சியின்  வால் நீளமாக இருப்பதால் அது ஒரு வகையான ராஜஸ்தான்  ஆட்டுகறி ஆக கூட இருக்கலாம் என தெரிவித்தார்..
 
இதற்கு முன்பு, இதே போல பல தடவைகளில் கெட்டுப்போன இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றி அழித்துள்ளனர்என்பதும் செய்தியாக பலமுறை சமீபத்தில் வந்துள்ளது .
 
எழும்பூரில் வந்த 12 பெட்டியை ஜோத்பூரில் ரயிலில் இரண்டு நாள் முன்பு தான் ஏற்றியிருக்கிறார்கள். அது சென்னை வந்து சேரவே சுமார் 43 மணி நேரம் ஆகும். இடைப்பட்ட தூரம் 2350 கி.மீ. எழும்பூரில் ரயில் வந்தபோது, அதிலிருந்த இறைச்சி பார்சலை பிரித்துப் பார்த்தபோது, ஐஸ் கட்டிகள் உருகாமல் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்தனர்.
 
அதாவது, சென்னைக்கு அருகே வரும்போது, இந்தப் பார்சலை பிரித்து ஐஸ் கட்டிகளைப் புதிதாக வைத்திருக்கிறார்கள். இது ரயில்வே நிர்வாகதுக்கு தெரியாமல் நடந்து இருக்குமா என்ற கேள்வியும் வலுத்துள்ளது ..
இப்படி ஜோத்பூரில் இருந்து சென்னை வரும் வழியில் குறிக்கிடும் பல்வேறு ரயில் நிலையங்களில் இப்படி ஐஸ் கட்டிகளைப் பார்சலை பிரித்து வைத்திருக்கிறது ஒரு மிக பெரிய நெட் வொர்க் கும்பல் என்றே உணவு பாதுகாப்புத்துறையினர் கருதுகிறார்கள்.
 
மேலும் எழும்பூர் வந்து சேர்ந்த 12 இறைச்சி பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தவுடன், அவற்றை பெற்றுக்கொள்ள வந்த கும்பல் நைசாக நழுவிவிட்டது.
பெட்டிகளுக்கு உரிமை கோரி யாரும் வரவில்லை. 
 
அதையடுத்து, சென்னை கால்நடை பல்கலைக்கழகத்தின் இறைச்சி ஆராய்ச்சித்துறைக்கு பிடிபட்ட பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சியின் சாம்பிளை அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் லேபில் வைத்து பரிசோதித்த பிறகே, அது நாய் கறியா, கன்றுக்குட்டியின் கறியா அல்லது வேறு எதாவது விலங்கின் இறைச்சியா என்பது தெரியவரும்.
 
இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ” சமீபத்தில் 2000 கிலோ இறைச்சி பிடிப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் சக்திவேல் என்பவரை நாங்கள் பிடித்து விசாரித்தோம். இதே குற்றச்சாட்டில் அவர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் உண்டு. நாங்கள் வலியுறுத்தி சொல்லயும், அந்தப் புகார் மீது சரியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாதாரண செக்ஷன்களில் வழக்குப்போட்டதாக கேள்விப்பட்டோம். சிந்தாதிரிப்பேட்டையில் கைப்பபற்றப்பட்ட கெட்டுப்போன இறைச்சி இருந்த இடத்தில் ஒரு டைரி கிடைத்தது.
 
அந்த டைரியில் சென்னையின் பிரபல ஸ்டார் ஒட்டல்கள் பலவற்றிற்கும் இறைச்சி சப்ளை செய்த வகையில் வரவு செலவு கணக்கு எழுதப்பட்டிருந்தது. அந்த ஒட்டல்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்போவதாக அதிகாரிகள் சிலர் தீவிரமாக இருந்தனர். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. எந்தச் சக்தி அவர்களின் கைகளை கட்டிப்போட்டது என்று தெரியவில்லை. துடிப்பான, நேர்மையான அதிகாரிகள் கெட்டுப்போன இறைச்சி பிஸினஸ் நெட் வொர்க் பிடிக்க ஆர்வம் காட்டினாலும், ஏனோ ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் செல்லமுடியவில்லை. வேறு என்ன செய்வது?” என்கிறார் அவர் விடைதெரியா ஏக்கமுடன்..
 
இதனால்  சில கேள்விகளை காவல் துறைக்கு முன் வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் அதில் அவர்கள் வைக்கும் முக்கிய கேள்விகள் :
சரக்கு (12 பெட்டி) பதிவு செய்தவர்கள் முகவரியும் ராஜஸ்தானில் தானே இருக்க வேண்டும் . அவர்கள் முகம் அங்குள்ள CCTV ரயில் நிலையத்தில் இருக்கும் தானே….
 
இறைச்சியை அனுப்ப வேண்டுமானல் மைன்ஸ் 15 டிகிரி யில் வைக்க வேண்டும் .. இதை சோதிக்காமல் ஏன் ராஜஸ்தான்  ரயில்வே துறை அதிகாரிகள் அனுமதிக்க  வேண்டும்…
 
இவ்வளவு பெரிய  1000/2000 கிலோ இறைச்சியை சப்ளை செய்ய  வேண்டுமானால் எத்தனை பெரிய நிர்வாகத்தை ராஜஸ்தானின்  அந்த இறைச்சி கும்பல்   நடத்தி வர வேண்டும் .. இதனை தடுக்காமல் அங்குள்ள பாஜக அரசு என்ன செய்கிறது…  
என்ற பவவகையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்