இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் :
நற்றிணை-யில்
“தைத் திங்கள் தண்கயம் படியும்” என்றும்
குறுந்தொகை-யில்
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்றும்
புறநானூறு-ல்
“தைத் திங்கள் தண்கயம் போல்” என்றும்
ஐங்குறுநூறு-ல்
“தைத் திங்கள் தண்கயம் போல” என்றும்
கலித்தொகை-யில்
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்றும்
தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளது சான்றாக கிடைக்கிறது.

அதே சமயம் தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல் நாளில் (August 17) தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது.

தொடதோட்செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.

இப்படி தைக்கும், ஆவணிக்கும் இருந்த புத்தாண்டு சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டாக தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது. கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது.

இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன.

தமிழர் கண்ட வானியல்மரபு எப்படி ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது என்பதை தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்
பரிதிமாற் கலைஞரும் (வி. கோ.சூரியநாராயணன் ஜூலை 6, 1870 – நவம்பர் 2, 1903)
மறைமலை அடிகளும் (சூலை 15, 1876 – செப்டம்பர் 15, 1950)
ஆராய்ந்து வந்தனர்…இதன் தொடர்ச்சியாக,

1921ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுமுறைகளின் அடிப்பையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர்.அதன் படி

[su_quote] முதல் தீர்மானமாக  தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு  எனவும் இரண்டாவது தீர்மானமாக திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல் எனவும் முன்றாவது  தீர்மானமாக ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும் எனவும் வழிமொழிய பட்டது  .[/su_quote]

இதில் இரண்டு முடிவுகளை, திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ்நாடு திமுக அரசு 1971ஆணையாக அறிவித்தது . ஆனால் அதே திமுக அரசு இதனை 87 ஆண்டுகள் கழித்தே, தமிழ் புத்தாண்டாக 2008 ஆண்டு தை மாதம் 23 ஆம் நாள் அரசு ஆணையாக அறிவித்தது ..பின்னர் ஸ்ரீ ரங்கதிலே யாத்திரிக நிவாஸ் கொண்டு வந்த அதிமுக அரசால் ஆகத்து 23, 2011ல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அரசால் அறிவிக்கப்பட்டது ..

அரசுகள் போகும் வரும்.. அவைகளை புறம் தள்ளி விட்டு 500 தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி 1921 இல் தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு முடிவுகளை ஏன் மொழிய வேண்டும் என்ற தேடலின் விடையை இந்த ஆய்வு கட்டுரை ..

இயற்க்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவ மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் என்றும் கூறுவர்.

மூத்த தமிழ் குடி மொழி சாதியினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக்கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தை ஆறாக பகுத்தார்கள்.

1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. ஏற்பாடு
5. மாலை
6. சாமம்

அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.

1 DAY = 6 POLUTHUs 1 POLUTHU = 60 NALIGAIs 1 NALIGAI = 24 MINUTEs ( AS PER PRESENT IST) ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

இங்கே நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும். தமிழர் இந்தக் கால அளவையே  முறையாக பயன்படுத்தினர். தற்பொழுது, பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில்  பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை ; இரவு முப்பது நாழிகை என்பதையும்  நினைவில் நிறுத்தி பொருத்தி பார்க்க வேண்டும்  .  இதன் மூலம்  நாம் அறிந்து கொள்ள வேண்டியது ஆங்கில நேரம் கணிக்கும் முறைக்கு முன்னரே , பஞ்சாங்கம் ஆரியம் போவதற்க்கு முன்னேரே ஆதவாது  இரண்டாயிரம் வருடம் முன்னர் தமிழர் வாழ்வில் நேரம் பகுத்து வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை தான்.

இப்படி பகுத்த தமிழர் தமக்குரிய ஆண்டை அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக பகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் – (வைகாசி – ஆனி தங்களுக்குரியது)
4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)

தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் மொழி திணிப்பு தலையெடுக்கத் தொடங்கியதுதான். இதற்கு மிக சிறந்த உதாரணம் பின்வரு 60 ஆண்டின் சமிஸ்கிரத பெயர்கள் :

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, சிறிமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விச , சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்த  சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விசய, சய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி , விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராப, பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராகூச, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாகூசி, குரோதன் , அகூய..

கிருஷ்ணன் நாரதரை ஒரு பெண்ணாக மாற்றி, அவருடன் 60 வருடம் வாழ்ந்து 60 மகன்களைப் பெற்றதாக புராண கதைகள் சொல்கின்றன. இந்த ஆய்வு புராணத்தை பற்றியதும் அல்ல .. ஆதலில் ஆதை கடந்து விடுவோம் ..

சிந்தைக்கு சில துளிகள் :

1) தமிழ் இல்லாத 60 வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மட்டுமே முதல் மாதத்தில் அன்று பிறக்கிறது !

2) தமிழக அரசு 60 ஆண்டு முறையை பின்பற்றவில்லை ஆனால் திருவள்ளவர் ஆண்டு முறையை பின்பற்றுகிறது.

3) ஏப்ரல் 14 அன்று புத்தாண்டு தொடங்குவது 60 ஆண்டு முறையை பின்பற்றும் அஸ்ஸாம், வங்காளம், கேரளம் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ..

4) 1921 ல் முறையை அறிவித்த பின் திருவள்ளுவர் ஆண்டு 51 ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு வருகிறது ஆனால் ., புத்தாண்டு தினத்தை எடுக்க 87 ஆண்டுகள் ஏன் தாமதம் என்ற காரணமும் ., பின்னர் அந்த புத்தாண்டு தினத்தை முறையை மாற்றிய அடுத்த அரசின் நோக்கமும் புரியாத பெரும் புதிர்.

முடிவுரை

முதுவேனில் காலத்தில் இறுதி வரும் சித்திரை காலத்தை புத்தாண்டாக கொண்டாடாம… பண்டைத் தமிழர் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு, தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாக தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும்…

மேல சொன்ன பிரபவ முதல் அட்சய வடமொழிப் ஆண்டுகளில் ஒரு தமிழ் பெயர் பெயர்களாவது இல்லாத 60 வட மொழி பெயர் கொண்ட ஆண்டுகள் தானா தமிழர்களுக்கு  . சரி அந்த சமஸ்க்ரித்த ஆண்டின் பெயராவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. உதாரணம்,

[su_quote]”சுக்கில” ஆண்டு = “ஆண் விந்து” ஆண்டு. “குரோதி” ஆண்டு = “பழிவாங்குபவன்” ஆண்டு “விகாரி” ஆண்டு.= “அழகற்றவன்” ஆண்டு “துன்மதி” ஆண்டு = “கெட்டபுத்தி “.ஆண்டு[/su_quote]

தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்து கூறிய மூன்று முடிவுகளில் பின் இரண்டை மட்டுமே எடுத்த தமிழக அரசு தமிழ் அறிஞர்கள் முதல் முடிவையும் எடுக்க வேண்டும். அதுவே தானே  சரியதாக இருக்க முடியும் . நீங்கள் செலவழித்த மணிதுளிகளுக்கு நன்றி ..