தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனத்தில் தொழில் துறை மற்றும் வர்த்தகப் பிரிவில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வேதியியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. வேதியியலாளர் (Chemist) – 01
சம்பளம்: மாதம் ரூ. 37700 முதல் ரூ.119500

2. இளநிலை வேதியியலாளர் (Junior Chemist) – 01
சம்பளம்: மாதம் ரூ. 35900 முதல் ரூ.113500

தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ. 150, ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 செலுத்தி இருப்பவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2019

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…