திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் 2021 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. அவ்வகையில் திமுக இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் எங்கும் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் நடத்தி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக மற்றும் தமிழக முதல்வர் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியதாக குற்றம்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சென்னை அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராஜலட்சுமி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சமீபத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் சசிகலா குறித்தும் அவதூறாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் அநாகரிகமான முறையில் பேசி இருக்கிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் அளித்து, இதுதொடர்பான வீடியோ காட்சியையும் ராஜலட்சுமி அளித்திருந்தார்.

இந்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரனை செய்து, கலவரம் தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், தொழில்நுட்ப தகவல் சட்டம், பெண்களை இழிவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு உறுதி- தமிழக அரசு