தமிழ்நாட்டில் சிலை கடத்தல் பிரிவினுடைய ஐ.ஜி. ஆக இருந்த திரு.பொன்மாணிக்கவேல் அவர்களை இந்த அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டதை, உயர்நீதிமன்றம் கண்டித்ததோடு, மீண்டும் அந்தப் பொறுப்பை அவரிடத்திலே ஒப்படைத்து, அவருக்கு தனி முகாம் அலுவலகம் ஒன்றை திருச்சியிலே அமைத்து, தேவையான போலீஸ் அதிகாரிகள் அளிக்க வேண்டுமெனவும், இவையனைத்தையும் ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ள வேண்டுமென்று தலைமைச் செயலாளர் அவர்களுக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்.-..

Special Correspondent

இஅதனை மேற்கொள்ளாமல் மேல்முறையீடு என்ற பெயரில் அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பிறகு தமிழக காவல்துறை டி.ஜி.பி ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை சிலை தடுப்புப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டு உத்தரவிட்ட நேரத்தில் சிலை தடுப்பு பிரிவில் உள்ள 531 வழக்குகளையும் வழங்காமல், வெறும் 19 சிலை தடுப்பு வழக்குகள் மட்டுமே அவரிடத்திலே கொடுக்கப்பட்டது ஏன் என்று நீதிமன்றமே கேள்வெயெழுப்பிய நிலையில்...

ஐ.ஜி அவர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது டி.ஜி.பி மற்றும் உயர் அதிகாரிகள் சிலை கடத்தல் வழக்குகள் குறித்த சென்சேசனல் தகவல்கள் எல்லாம் கேட்கிறார்கள் என்றும்,

சிலை தடுப்பு பிரிவில் அவரின் கீழ் நியமிக்கப்பட்டிருக்கும் போலீஸ் அதிகாரிகளை எல்லாம் டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள் என்றும் முறையிட்டும் தமிழக வழக்கறினருடன் பகீரங்க மோதலும் வெடித்த நிலையில்,

சிலை திருட்டு வழக்குகளில் தமிழக அரசு உதவவில்லை என ஐ.ஜி பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் கூறியது ஏன் என்று நேற்று சட்டமன்றத்தில் சிலை கடத்தல் விவகாரம் குறித்து கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து,திமுக எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்வியால் பரபரப்பு எற்பட்டது...

மேலும் இதில் நான்கு முறை ஒரு வழக்கில் இந்த அரசின் கீழ் இருக்கக்கூடிய தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பிக்கும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கிறது என்று சொன்னால் அதிகாரிகளுக்கு, உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தெரியாதா? அல்லது அரசே திட்டமிட்டு சிலை கடத்தல் விவகாரத்தில் தடைகளை ஏற்படுத்துகிறதா? என்ற அந்த சந்தேகம் தான் இப்பொழுது எழுந்திருக்கிறது என்றும்,

ஆகவே, ஆண்டவன் சிலைகளை எல்லாம் ஆள்பவர்கள் எப்படி பாதுகாக்கிறார்கள், என்று மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, சிலை கடத்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவை உடனடியாக இந்த அரசு ஏற்று அதற்கு ஏற்ற வகையில் கடமை ஆற்றிட வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.

தொடர்பு செய்திகள் : சாமி சிலையிலும் மோசடி முத்தையா கைது