தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பிலிருந்து அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே டெல்லி வட்டாரங்களில் தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பிலிருந்து அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் பரவின. தற்போது இந்த செய்தியை நிதியமைச்சர் அருண் ஜெட்லி உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: சில நாட்களுக்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக என்னை தொடர்பு கொண்டார். அப்போது அவர், குடும்பம் சார்ந்த வேலைகள் இருப்பதாகவும், அதனால் அமெரிக்காவுக்கே திரும்பி செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய சொந்த காரணங்கள் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததால் அவர் எடுத்த முடிவை என்னால் தடுக்க முடியவில்லை. அதனால் தான் அவரது ராஜினாமா முடிவை நான் ஏற்றுக் கொண்டேன்” என்று ஜெட்லி கூறியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு தலைமை பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவெ அமெரிக்காவில் பேராசிரியரராக பணியாற்றி வந்த மீண்டும் அதே பணியை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மார்ச் 2013, இல் இதே அரவிந்த் சுப்ரமணியன் United States House Committee on Ways and Means hearing on “US-India trade relations.” கலந்து கொண்டு பேசிய பேச்சு விவ்ரம் " During his testimony, Arvind Subramanian said "by discriminating against Indian companies and exporters, (US initiatives) will exert natural pressure on India to open up".
ஆதாவது "இந்திய எற்றுமதியாளர்களுக்கு தொல்லை அமெரிக்கா தந்தால் இந்தியா தனது எல்லைகளை அமெரிக்காவுக்கு திறக்குமாம்" .. என்று கூறியுள்ளார்.
எப்படிப்பட்ட ஆளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பு மோடி கொடுத்து நான்கு வருடமாக உள்ளார் பார்த்தீர்களா என்றும் சமூக வலைதளத்திலே கேள்விகள் வைக்கிறார்கள்...
தொடர் செய்திகள் : எதிர்கட்சிகள் எதிர்ப்பால் பதறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்கம்