நேற்று லேசான கசிவு என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறிய நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக்கசிவை தடுக்கபோதிய மின்சாரம் தேவை என்றும் குறைந்த அளவு தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவும் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Special Correspondent

மே28ம் தேதி திடீரென சீல் வைத்ததால் ஆலையை கண்காணிக்க முடியவில்லை என்று வேதாந்தா நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் மின்சாரம் கேட்டு ஸ்டெர்லைட் ஆலை அளித்த கோரிக்கை அரசுக்கு அனுப்பட்டு உள்ளது. மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஆலையில் இருந்து அமிலத்தை அப்புறப்படுத்த மேலும் 2 நாட்கள் ஆகும், கந்தக அமிலகத்தை பயன்படுத்தக்கூடிய மற்ற ஆலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் கந்தக அமிலகத்தை மற்ற ஆலைக்கு கொண்டு செல்ல 5 டேங்கர் லாரி தயாராக உள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தொடர் செய்திகள் : மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு பொதுமக்கள் அதிர்ச்சி