தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் நிலைப்பாடு குறித்து, ‘பேரமெல்லாம் நடக்கிறது’ என்று தகவல்கள் வெடித்துக் கிளம்பும் நிலையில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமாமகேஸ்வரி, தன்னுடைய கணவர் ரகுபதியின் முகநூல் பக்கத்தில் ‘துரோக ஆட்சி’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில் அவர் ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால உறவாகவும் அஇஅதிமுகவின் நீண்டகால வரலாற்றில் அம்மா அவர்களோடு இணைந்து சின்னம்மா சசிகலா அவர்களின் தலைமையில் கட்சிப் பணியாற்றுவதும், அம்மாவின் ஆட்சி சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலோடு தொடர்வதும் தான் சரியானது என முடிவெடுத்தாகவும்,
அம்மாவின் நல்லாட்சி அமைந்திட ஆட்சி தலைமை மாற்றம் ஏற்படுவதே சரியாக இருக்கும் என்றும்,
நயவஞ்சக தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக மனுவை வாபஸ் பெருவதன் மூலம் இந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதவில்லை எண்றும்,
18 பேருமே வாபஸ் பெற்றாலும் கூட தேர்தல் நடத்த முற்றுப்பெறாத தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்பு இருப்பதாகவும் கருதவில்லை என்றும்,
பெரும்பான்மையில்லாத ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும்,
அப்போது இடைத்தேர்தல்களை நடத்த மத்திய அரசு திட்டமிடுவதாகவுமே அரசியல் செய்வதாக யூகிப்பதகாவும்,
ஜனநாயகத்தில் சட்டம் தவறாகும் பட்சத்தில் கழகத்தின் தியாக வீரர்களுடன் மக்கள் பேராதரவுடன் வென்றெடுப்போம். என்று கூறியிருக்கிறார் உமாமகேஸ்வரி.
எடப்பாடி கோஸ்டி தினகரன் அணியினர் 8 பேரை வளைத்து விட்டது என்று அவர்களே கூறி வந்த நிலையில் 25சி வாங்கி விலை போனதாக சொல்லபட்ட பெண் எம்எல்ஏ அதிரடியாக பேசி இருப்பது கூறிப்பிடதக்கது...
தொடர் செய்திகள் : தீர்ப்பு வெளியானதில் திருப்தி எடப்பாடி ஆதரவாளர்கள் குஷி