டில்லியில் ஆளும் அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையேயான அதிகாரப் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் அதில் துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் எதுவும் கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3:2 தீர்ப்பளித்துள்ளார்.

Special Correspondent

முன்னதாக இந்த மோதல் விவகாரம் தொடர்பாக டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டில்லி யூனியன் பிரதேசம் என்பதால், துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் அதிகம் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை அமைர்வு ஐந்து பேர் அடங்கிய பெஞ்ச் டிசம்பர் மாதம் விசாரனையை முடித்து தீர்ப்பை ஓத்திவைத்தது...

ஆறு மாதம் கழித்து பெருவாரியான தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மீது துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்றும்,

எல்லா விஷயங்களிலும் அமைச்சரவையுடன் இணக்கமாக துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும். மத்திய அரசு சட்டப்பேரவை விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும்,

அரசியல் சாசனத்தை மதிக்கும்படியே நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தை மதிப்பது அனைவரது கடமை என்றும்,

மத்திய, மாநில அரசுகளின் உறவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆளுநரோ, மாநில அரசோ எதனால் நலத்திட்டங்கள் தாமதமானாலும் இரண்டுமே பொறுப்பேற்க வேண்டும். அமைச்சரவை முடிவுகள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,

ஆளுநர் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டியது அவசியம் இல்லை என்றும்,

உச்ச நீதிமன்றம் அளித்த 9 தீர்ப்புகளின் அடிப்படையில் டில்லி அரசுக்கு மற்ற மாநிலங்களுக்கு இருப்பது போன்ற அதிகாரங்கள் கிடையாது. ஆனால், ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை. நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என்றும்,

துணைநிலை ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. எல்லா விஷயங்களுக்கும் மாநில அரசு ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி கன்வில்கர் தீர்ப்பை வாசித்தார்...

இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னை சரிசெய்து கொள்ளாவிடில் நீதிமன்றம் செல்வோம் என்று கூறியுள்ளார்...

இத்தீர்ப்பு பாஜக அல்லாத அரசுகளை துணைநிலை ஆளுநர் மற்றும் ஆளுநர் மூலம் கட்டுபடுத்தும் மத்திய மோடி அரசின் முயற்ச்சிக்கு பெரும் பின்னைடவாக உள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்பு செய்திகள் : டிஜிபிக்களை நியமிக்க புதிய வழிமுறைகளை வகுத்தது உச்சநீதிமன்றம்