மாநில அரசு இடைக்கால டிஜிபிகளை நியமிக்க தடை விதித்து பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே 2 ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையில் டிஜிபிக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இடைக்கால டிஜிபிக்களை நியமிக்க கூடாதென மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஜிபி நியமனம் தொடர்ப்பாக பிரகாஷ் சிங் தொடுத்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமான, அரசியல் ரீதியாக ஒத்துபோகக்கூடிய அதிகாரிகளை டிஜிபிகளாக நியமிக்கிறார்கள் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றச்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து டிஜிபிக்களை நியமிக்க சில புதிய வழிமுறைகளை பின்பற்றும் படி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
டிஜிபிக்களை நியமிக்க உச்சநீதிமன்றம் வகுத்துள்ள புதிய வழிமுறைகள் பின்வருமாறு :
டிஜிபிக்களை அந்ததந்த மாநில அரசுகள் நேரடியாக நியமிக்க கூடாது.
இடைக்காலமாக டிஜிபிக்களை நியமிக்கக் கூடாது என மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
2 ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையில் டிஜிபிக்கள் நியமிக்கப்பட வேண்டும்.
டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு புதியவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே 3 பேர் பட்டியலை அனுப்ப வேண்டும்.
பட்டியலில் உள்ள 3 பேரில் ஒருவரை டிஜிபியாக நியமிக்க யுபிஎஸ்சி பரிந்துரை செய்யும்.
ஓய்வு பெறும் நிலையில் இருப்பவரை டிஜிபியாக நியமிக்க கூடாது.
முன்னான் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஒய்வு பெற்ற பின்னரும் டிஜிபி ராமானுஜம் ஆண்டுக்கணக்கில் தமிழக்த்தில் அட்வைசர் என்ற பெயரிலே தலைமை பொறுப்பில் இருந்த்தார் என்பது குறிப்பிடதக்கது.
தொடர்பு செய்திகள் : உயர்நீதிமன்றம் கேக்கும் சான்றுகள் தமிழக அதிமுக அரசு அதிர்ச்சி