இந்திய நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் போது, அதனுடன் சோ்த்து ஒவ்வொரு தனி நபரின் தாய் மொழி குறித்த புள்ளி விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பாக அதிகாரிகள் எஸ்.கே.பிரபாகர், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுவை மாநில பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் வரவு - செலவு கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புக்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆணையத்திற்கு நிரந்தர அலுவலகம் அமைப்பது, ஊழியர் நியமனம் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாககாவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் சார்பில் காவிரி உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில அரசுகளும் தங்களது மாநில பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். இந்நிலையில் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 29ம் தேதி, தமிழகம் சார்பில் எடுத்து வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று கர்நாடகா முதல்வர் குமராசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் நடைபெறவுள்ள கூட்டத்தில் கர்நாடகா பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இடைக்கால தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, காவிரி நீரை அளவிடுதல், அணைகள் பராமரிப்பு, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடும் தண்ணீர் அளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இடைக்கால தலைவர் ஆலோசனை நடத்துகிறார். தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் தர வேண்டும் என்றும், கடந்த ஆண்டில் பாக்கி வைத்துள்ள டிஎம்சி நீரையும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தான் இறுதியானது என்பதால் கர்நாடகா இதை ஏற்குமா என்ற சந்தேகமும் உள்ளது. இருப்பினும் கர்நாடகா சார்பில் கலந்து கொண்டுள்ள உறுப்பினர்கள் தங்கள் மாநில பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் பதிவு செய்வார்கள் என சொல்ல படுகிறது.தொடர்பு செய்திகள் : காவிரி மேலாண்மை ஆணையம் : இறுதி முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை