பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய கட்சியான பாஜக ஆட்சி அமைத்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று கூறி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு புது 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மாற்றத்தால், கருப்பு பண பதுக்கல் ஒழியும் என கூறப்பட்ட நிலையில், சுவிஸ் வங்கியில் பண பதுக்கல் 54% சதவீதம் அதிகரித்து ரூ 7000 கோடியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து சில முக்கிய புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளது. அதில் ரூ.3,200 கோடி இந்திய ரூபாயாக வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது என்றும்,
பிற வங்கிகள் மூலமாக சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட தொகை ரூ.1,050 கோடி என்றும்,
பங்குகள் உள்ளிட்ட பிற வகைகளில் செலுத்தப்பட்ட தொகை ரூ.2,640 கோடி. என கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லீ தெரிவித்துள்ளார்.
சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்றும் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம் பதுக்கி இருந்தால் கண்டறியப்படும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
முன்னதாக 570 கோடி பிடிப்பட்ட வழக்கிலும் யாரும் உரிமை கோராமல் இருந்த நிலையில் என்று 18 மணி நேரம் கழித்து சொல்லப்பட்ட நிலையில...
லாரிகள் பிடிப்பட்டு மூன்றாவது நாளிலே அது எஸ்பிஐ வங்கி பணம் என்று அப்போதய நிதி மந்திரி ஜெட்லி கூறியதும்,
ஆனால் திருட்டு நம்பர் ப்ளேட் லாரியில் பதிவு எண். AP 13 X 5204 ஆந்திராவை சேர்ந்த "ஜாபர் அகமது காண்" சொந்தமான "இன்னோவா" காருக்கு உரிமையானது...
எப்படி வங்கி பணம் எடுத்து செல்லப்பட்டது என்ற விவரம் இது வரைக்கும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
தொடர்பு செய்திகள் : பாஜக ஆட்சி காலத்தில் இருமுறை 50% அதிகரித்த சுவிஸ் பணம்