சமூக ஆர்வலர் பிமப்பா கதத், பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமரின் சுற்றுப் பயணங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் விவரம் :
பிரதமர் கடந்த 48 மாதங்களில் 41 முறை அரசு முறைப் பயணமாக உலகில் உள்ள 52 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதாவது அவர் தனது பிரதமர் பதவிக் காலத்தில் 165 நாட்களை வெளிநாடுகளில் சுற்றுப் பயணமாகவே கழித்துள்ளார். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அவரது சுற்றுப் பயணங்களிலேயே 9 நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல் 15 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப் பயணத்துக்குத்தான் அதிகபட்சமாக ரூ.31,25,78,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அதே போல, கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 15 - 16ம் தேதிகளில் பூடானுக்கு சென்ற பிரதமரின் பயணத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.2,45,27,465 செலவிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பிரதமர் மோடி உள்நாட்டு சுற்றுப் பயணங்கள் மற்றும் அப்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் செலவினங்கள் குறித்து இதில் தெரிவிக்கப்படவில்லை. மேலும், பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆன செலவுகள் குறித்து நான் ஆர்டிஐ மூலம் கேட்டதற்கு, பாதுகாப்புக் காரணங்களுக்காக அது ஆர்டிஐயின் கீழ் வராது என்று விண்ணப்பத்தை நிராகரித்து விட்டனர் என்கிறார்.
முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் ஆர்டிஐக்கு விண்ணப்பித்தேன். தகவல் கிடைத்த பிறகே இது பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும் என்று நினைத்து பகிர்ந்து கொள்கிறேன் என்ற கதத், இந்த சுற்றுப் பயணங்கள் மூலமாக இந்தியா அடைந்த பொருளாதார நன்மைகள் என்ன என்பதை குறித்து மத்திய அரசு தான் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
165 நாட்கள் பயண செலவு 355 கோடி என்றால் ஒரு நாளைக்கு சுமார் 2.15 கோடி மோடிக்கு மட்டும் செலவாகி உள்ளது சரிதானே.தொடர்பு செய்திகள் : தொழில்துறை லஞ்ச விவகாரத்தில் தமிழகம் 2ம் இடத்தை பிடித்து உள்ளதாக ஆய்வில் தகவல்