சுவிஸ் தேசிய வங்கியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணமதிப்பு இருப்பின்படி தரவரிசையில் இந்தியா 73வது இடம் பிடித்துள்ளது.
முன்னதாக , இந்த வங்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு கணக்கின்படி தரவரிசையில் 88வது இடத்தில் இருந்தது . ஆனால், சமீபத்திய தகவலின்படி, 2017-ஆம் ஆண்டில் 50 சதவீதத்திற்கு (சுமார் 7 ஆயிரம் கோடி) உயர்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தியா 73வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த தரவரிசையில் பாகிஸ்தான் 72வது இடத்தில் உள்ளது.சுவிஸ் வங்கிகளில் உலகெங்கிலும் இருந்து வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் மொத்தம் 3,20,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து இங்கிலாந்து முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் 10 இடத்தில் மேற்கிந்திய தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங், பஹாமஸ், ஜெர்மனி, கிர்ன்சே, லக்சம்பர்க் மற்றும் கேமன் தீவுகள் ஆகிய நாடுகள் உள்ளன.
மேற்கண்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் சுவிஸ் வங்கி அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் ஆகும்.
சமூக வலைதளத்திலே பணமதிப்பிழப்பு செய்தும் கறுப்புப்பண வளர்ச்சி எற்பட்டது எப்படி என்று பலரும் மோடி அரசை நோக்கி கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர். ..
இந்த நிலயில் இன்று இந்திய பட்டயக் கணக்காளா்கள் அமைப்பான ஐசிஏஐ-யின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சா் பி.பி.சௌத்ரி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு தொடா்ந்து தீவிரமாகப் போராடி வருகிறது. 2.25 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அந்த போலி நிறுவனங்களின் பின்னணியில் இருப்பவா்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்பு செய்திகள் : சுவிஸ் வங்கியில் உள்ள அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல : சொல்கிறார் அருண் ஜெட்லி