பாஜக மகளிர் அணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

பாஜக மகளிர் அணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். கோவையை பூர்வீகமாக கொண்ட இவர் கட்சியில் படிப்படியாக வளர்ந்து இன்று தேசியப் பதவியை எட்டிப்பிடித்துள்ளார். மைக்கும் மேடையும் கிடைத்துவிட்டால் வாய்க்கு வந்ததை பேசும் பாஜகவினர் மத்தியில் மிகுந்த கவனத்துடன் வார்த்தைகளை பிரயோகம் செய்பவர். விவாதக்களமாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் … Continue reading பாஜக மகளிர் அணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்