உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நியமித்தார். வரும் அக்.3 -ம் தேதி தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பொறுப்பேற்கிறார். முன்னதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரை செய்து தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா இந்த ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக யார் நியமிக்கப்பட உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த தலைமை நீதிபதி யார் என பரிந்துரைக்கும்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியது. சீனியாரிட்டி படி, ரஞ்சன் கோகாய், மிஸ்ராவிற்கு அடுத்த இடத்தில் உள்ளார். அவர்தான் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனை அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார். மேலும் வரும் அக்.3 ம் தேதி புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவியேற்கிறார்.
அசாமில் 18 நவம்பர் அன்று பிறந்த ரஞ்சன் கோகோய்க்கு வயது 63 .. இவர் தனது 65 ஆம் வயது வரி இந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடதக்கது