மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில்(NRIDA) வேலைவாய்ப்புகள்-2021.

பகிர்வுகள் 1 தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில்(NRIDA)  Consultant, Assistant Director, Senior Consultant, Intern  பணிகளுக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடைசி தேதி : 18-06-2021 பணி : Consultant, Assistant Director, Senior Consultant, Interns மின்னஞ்சல் : nridavacancies@gmail.com. காலியிடங்கள் : 18 கல்வித்தகுதி : இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், சிவில் இன்ஜினியரிங்  பணியிடம் :  இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய விண்ணப்பபடிவங்களை மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு பாமக

எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்

பகிர்வுகள் 248 எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை, அதிமுகவின் அழிவு பழனிசாமியால் தொடங்கிவிட்டது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 23 இடங்களில் 5 இடங்களில் வென்றது பாமக. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு பாமக

சிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்

பகிர்வுகள் 379 ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் கூட்டணி கட்சியினரை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்ததற்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கடும் கண்டனம் மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல் தமிழ்நாடு தேசியம் விவசாயம்

ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பகிர்வுகள் 438 ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10 ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு திமுக பெண்கள்

பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்- முதலமைச்சர் முக ஸ்டாலின்

பகிர்வுகள் 386 சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, காவல்துறையில் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக காவல்துறையினருக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி, வேலை நேரம் இரண்டு ஷிப்டுகளாக பிரிப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை டிஜிபி திரிபாதி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் மேலும் வாசிக்க …..

கல்வி சட்டம் சமூகம் தமிழ்நாடு பெண்கள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்

பகிர்வுகள் 476 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக பிரபலமான பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலில் சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த புகார்கள், பின்னர் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் சென்று, விசாரணை நடைபெறுகிறது. முன்னதாக மேலும் வாசிக்க …..

ஆன்மிகம் சமூகம் தமிழ்நாடு திமுக பெண்கள்

தமிழ்நாட்டில் பெண்களும் அர்ச்சகர் ஆக சிறப்பு பயிற்சி- அமைச்சர் சேகர்பாபு

பகிர்வுகள் 407 அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி இந்து சமய மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் பாஜக

ஒன்றிய அரசை விமர்சித்ததாக நடிகை மீது தேச துரோக வழக்கு- லட்சத்தீவில் அரங்கேறும் அவலம்

பகிர்வுகள் 400 லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் வசித்துவரும் லட்சத்தீவில், பெரும்பாலானவர்கள் மலையாள மொழி பேசும் இஸ்லாமியர்கள். கடந்த டிசம்பர் மாதம், லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக குஜராத்தைச் சேர்ந்த பிரஃபுல் கோடா படேல் என்பவரை நியமித்தது ஒன்றிய பாஜக அரசு. பிரஃபுல் கோடா படேல் பதவியேற்ற நான்கே மாதங்களில் பல அதிரடிச் சட்டங்களைக் கொண்டு மேலும் வாசிக்க …..

கல்வி கொரானா சமூகம் தமிழ்நாடு

9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை- அமைச்சர் பொன்முடி

பகிர்வுகள் 287 ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் பாலிடெக்னீக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு இந்த ஆண்டுக்கான அனைத்துப் பொதுத் தேர்வுகளையும் ரத்து செய்து அறிவித்துள்ளது. இதனால் உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தமிழ்நாடு

பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!

பகிர்வுகள் 305 விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்ட பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராகும்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கடந்த 2019 ஆம் ஆண்டு கோயில்களின் வடிவமைப்புகள் குறித்து பேசியது சர்ச்சையானதை அடுத்து, திருமாவளவனை கடுமையாக விமர்சித்து, தனது ட்விட்டர் பதிவில் நடிகை காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் மேலும் வாசிக்க …..