உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 2 நீதிபதி அமர்வில் திங்களன்று மேல்முறையீடு செய்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும், 6 மாதத்திற்குள் மூடவேண்டும். புதிதாக மணல் குவாரிகளை திறக்கக்கூடாது.

Special Correspondent

வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. அதேபோல் கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக நேற்று உத்தரவிட்டது.

குறிப்பாக சட்டவிரோதமாக ஆற்று மணலை அள்ளுவதும் ஒரு காரணம். பல ஆறுகள் மிகவும் ஆழமாகிக் கொண்டே போகிறது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததுடன், இதனால் மணல் அரியவகை கனிமப்பொருளாகி விட்டது.

விவசாயத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியதுடன், மணல் விலையும் அதிகரித்துள்ளது என நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்றனர்.

தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது எனவும் அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மணல் குவாரிகளை மூடும் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு திங்களன்று மேல்முறையீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அரசின் இயற்கை சுரண்டலை ஆதரிக்கும் இந்த செய்தி தங்களை மிகவும் வருந்த செய்வதாக இயற்கை ஆர்வலர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர் செய்திகள் : தாறுமாறாக எகிறும் மணல் விலை - பில்டர்கள் அதிர்ச்சி