பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

Special Correspondent

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கின்றது. இதற்கிடையில் கடந்த மாதம்(ஏப்ரல்) 24-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரை 19 நாட்கள் விலையை ஏற்றவில்லை.

இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல் காரணம் என்ற கூறப்பட்டது.இந்த நிலையில் தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 14-ந்தேதியில் இருந்து மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை உயர தொடங்கியது.

கடந்த 14-ந்தேதி முதல் நேற்று வரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 73 காசும், டீசல் விலை 93 காசும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 23 காசு உயர்ந்து, 78 ரூபாய் 16 காசுக்கும், டீசல் 24 காசு உயர்ந்து 70 ரூபாய் 40 காசுக்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை 0.30 காசுகள் அதிகரித்து ரூ.78.46 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 0.31 காசுகள் அதிகரித்து ரூ.70.80 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து 5-நாளாக ஏற்றத்திலேயே செல்வதால், வாகன ஒட்டிகள் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

பாஜகவின் மோடி அரசு அதி பயங்கரமான #petrolscam செய்து வருவதாக சமூக வலைதளத்திலே பதிவுகள் குவிந்த வண்னம் உள்ளன...

தொடர்பு செய்திகள்