பெட்ரோல் டீசல் விலை தொடர் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிர்வனங்களிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுப்படுவது குறித்து டெல்லியில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். டீசல் விலை, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தினமும் டீசல் விலை உயர்த்தப்படுவதால் லாரி தொழில் அழிந்துவிட்டது என்று தெரிவித்தனர்.
கடந்த இரண்டு மாதங்களில் டீசல் விலையானது ரூ.12.50 உயர்ந்துள்ளதால் தொழில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்சூரன்ஸ் கட்டண உயர்வு அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக தான் கால வரையற்ற போராட்டத்தின் தேதியை அறிவிப்பதற்காக தான் டெல்லியில் இந்த கூட்டத்தை கூட்டியிருப்பதாக தெரிவித்தனர்.