இந்திய வங்கிகளிலே அதிக பட்ச வாராக்கடன் வைத்துள்ள அரசு வங்கி ஐடிபிஐ தான் . இதன் வாராகடன் 2016-17 போது ரூ 44,753 கோடி இருந்த நிலையில் 2017-2018 ஆம் ஆண்டு இது மேலும் உயர்ந்து ரூ 55,588 கோடிகளாகியது...

Special Correspondent

இதன் மூலம் வாராக்கடன் (NPA) மொத்த கடன்களில் 28% எட்டி இது இந்திய வங்கிகளின் முதல் அதிகபட்ச மோசமான நிலையை அடைந்து உள்ளது.

பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த வங்கியின் 8% பங்குகளை வைத்துள்ள அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது பங்குகளை அதிகரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி 51% அளவிற்கு எல்ஐசி நிறுவனம் பங்குகளை வைத்து கொள்ள முடியும். இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு பணபரிவர்த்தனை வாரியம் ஆகியவற்றின் ஒப்புதலுக்கு பிறகு ஐடிபிஐயின் பங்குகளை எல்ஐசி வாங்கும்.

இதன்படி மேலும் 43% பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்கி கொள்ளும். இதன் பிறகு ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசின் பங்குத் தொகை 86%ல் இருந்து 44% ஆக குறையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Special Correspondent

இதன் மூலம் 51% பங்குகளை வாங்குவதால் எல்ஐசியின் கட்டுப்பாட்டிற்குள் ஐடிபிஐ வங்கி வர உள்ளது. எனினும் நிர்வாக பணிகளை எல்ஐசி மேற்கொள்ளாது என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து விலகும் முதல் பொதுத் துறை வங்கியாக ஐடிபிஐ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பு செய்திகள் : வங்கி மோசடியில் மக்கள் இழந்த பணத்துக்கு பதில் என்ன சீறும் முன்னாள் கவர்னர்