பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சத்தியஸ்ரீ சர்மிளா வழக்கறிஞராக பதிவு செய்தார்.

Special Correspondent

இந்நிலையில் பார் கவுன்சிலில் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சத்தியஸ்ரீ, இன்று வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக நான் பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சியடைகிறறேன்.

இதற்காக எனக்கு ஏராளமானோர் உதவியுள்ளனர். நிறைய கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த, உதவி செய்த அனைவருக்கும் நன்றி.

2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இன்று நீதித்துறையில் நான் சேர்த்துள்ளேன்.

பின்தங்கியுள்ள சமுதாயத்தில் இருந்துவந்த தனக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் எனக்கும் மட்டுமல்லாமல் என் திருநங்கை சமுதாயத்திற்கும் கிடைத்த பெருமை என்ற அவர் அனைத்துத் துறையிலும் திருநங்கைகள் சாதிக்க வேண்டும். எனது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்னாலான உதவியை செய்வேன்" என்றார்.

இன்னும் எங்கள் சமுதாயம் நிறைய அங்கீகாரங்களை பெறவேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார். சத்யஸ்ரீ சர்மிளா முன்னதாகவே வழக்கறிஞராகும் தகுதி பெற்றிருந்த போதும், சமூகத்தில் திருநங்கைகளுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வரையில் பதவியேற்க மாட்டேன் என முடிவு செய்திருந்தார்.

தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதவியேற்றுள்ளார்.

தொடர்பு செய்திகள் : இந்தியாவின் முதல் திருநங்கை சூளைமேட்டு உதவி ஆய்வாளர்