சுவிஸ் நேஷனல் வங்கி ஜூன் 28ம் தேதி வெளியிட்ட ஆண்டுவாரித் தரவுகளின் படி 2017-ல் மொத்தமாக அயல்நாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3% அதிகரித்துள்ளது. அதாவது 1.46 ட்ரில்லியன் அல்லது சுமார் 100 லட்சம் கோடி 2017-ல் மட்டும் டெபாசிட் ஆகியுள்ளது.

Special Correspondent

வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று பதுக்கும் கருப்புப் பண நடவடிக்கைகளை மத்திய அரசு கடுமையாக முடக்கி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த தரவுகள் ஆச்சரியமூட்டக்கூடியவையாக உள்ளது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் 50% அதிகரித்து, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததை விட 2017-ல் நிலமைகள் தலைகீழாகி 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், அதாவது சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் டெபாசிட் ஆகியுள்ளது.

2016-ல் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 45% சரிவு கண்டது. இதுதான் மிகப்பெரிய சரிவாகக் கருதப்பட்டு வந்தது.

2017-ன் படி, சுவிஸ் நேஷனல் வங்கியின் தரவுகளின் படி 2017-ல் நேரடியாக இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகை சுமார் ரூ.6,891 கோடியாகும்.

2007 வரை பொறுப்பாண்மை ரீதியாக வைத்திருந்த பணம் மட்டுமே பில்லியன்களில் இருந்தது. அதன் பிறகு கட்டுப்பாட்டுப் பிடிகள் இறுக குறைந்து வந்தது. 2006 இறுதியில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த தொகை மட்டும் ரூ.23,000 கோடியாக இருந்தது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இது 10-ல் ஒரு பங்கு குறைந்தது. இந்தச் சாதனை அளவுக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் அதிகரித்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.

2011-ல் 12%, 2013-ல் 43% தற்போது 2017-ல் 50.2%. அதிகரிப்பு கண்டது,

அதாவது 2004-ல் 56% அதிகரிப்புக்குப் பிறகு தற்போது 2017-ல் 50%க்கும் சற்று கூடுதலாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கி இருப்பில் அதிகரித்துள்ளது.

இதில் 50% மேல அதிகரித்த இரண்டு முறையும் 2004 இல் வாஜ்பேயி , 2017 இல் மோடியும் பாஜக சார்பில் பிரதமராக இருந்து இரண்டுமே பாஜக அரசு தான் ஆட்சி செய்தது என்பது குறிப்பிடதக்கது...

தொடர்பு செய்திகள் : சுவிஸ் வங்கியில் உள்ள அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல : சொல்கிறார் அருண் ஜெட்லி