சட்டப் பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்த போது திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பேசியதாவது:

Special Correspondent

காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளது. அதை இரண்டாக பிரித்து தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும்,

தாம்பரம் நகராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யாத அளவுக்கு நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இருப்பினும், ஜிஎஸ்டி சாலையை ஒட்டி மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடம் 13.76 ஏக்கர் இடம் உள்ளது. அதில் நரேந்திரா பிளாட்ஸ் உள்ளது. மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடம். அது இன்றைய மதிப்பில் பல கோடிகள் மதிப்பு உள்ளது. அதை மீட்டால் பிற்காலத்தில் பல மேம்பாட்டு பணிக்கு உதவும். இதை மீட்க வேண்டும் என்றும்.,

அதேபோல, சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் ஜேப்பியார் என்ற ஒரு கல்லூரி இருக்கிறது. அந்த கல்லூரியில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அது இன்றைக்கு ரூ.700, 800 கோடி மதிப்பு இருக்கும். அவர் மடக்கி வைத்திருக்கிறார். அதை உடனடியாக இந்த அரசு மீட்டு ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார்" அரசு நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அரசின் கவனத்துக்கு உறுப்பினர் கொண்டு வந்துள்ளார். அதுகுறித்து துறை வாயிலாக ஆய்வு செய்து முதல்வர் கவனத்துக்கு எடுத்து சென்று மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் " என்றார்.

மறைந்த விட்ட ஜேப்பியார் எம்ஜியார்க்கு மிகவும் வேண்டிய விசுவாசி அவரின் சீடர் அவரை பற்றி வந்த இந்த குற்றசாட்டு பலரையும் புருவத்தை நிமிர்த்தி பார்க்க வைத்துள்ளது.

தொடர்பு செய்திகள் : மோடி 165 நாட்கள் இந்தியாவில் இல்லாமல் வெளிநாடு செய்த பயண் செலவு 355 கோடி