இந்தியாவில் தங்களை அதிகம் பாதிக்கும் பிரச்சனையாக ஊழல் விளங்குவதாக தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தொழில்துறை லஞ்ச விவகாரத்தில் மேற்கு வங்கதிற்கு அடுத்தப்படியாக தமிழகம் 2ம் இடத்தில உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Special Correspondent

இந்த சூழலில் இந்தியாவில் தொழில் துறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் தொழில் துறையின் வேகம் தடைப்படுவதாக ஓர் ஆய்வில் தொழில் துறையினர் கூறியுள்ளனர். இதுபோல் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். என்சிஏஇஆர் என்னும் தேசிய பொருளாதார ஆய்வு கவுன்சில் நடத்திய மாநிலங்களில் உள்ள முதலீடு வாய்ப்பு குறியீடு 2017 என்ற ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

மாநிலங்களில் தொழில் தொடங்குவதில் உள்ள 5 முக்கிய பிரச்னைகளை ஆய்வு நிறுவனத்தினர் பட்டியல் இட்டுள்ளனர். அதில் முதலாவதாக லஞ்சம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டதாக 57% பேர் கூறியுள்ளனர்.

தொழில் துறையில் அனுமதி பெறுவது தொடர்பான கேள்விக்கு 53% பேர் அனுமதிகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவதை சுட்டி காட்டியுள்ளனர்.

3வது தலைப்பான திறம்மிக்க ஊழியர்கள் கிடைப்பது தொடர்பான கேள்விக்கு அத்தகைய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என 50% கூறியுள்ளனர்.

இது போல் கிடைக்கும் திறமையான ஊழியர்களின் திறம் திருப்திகரமாக இல்லை என 49% கூறியுள்ளனர்.

ஐந்தாவது முக்கிய தடைக்கல்லாக மாநிலங்களின் வரிக் கொள்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ள 44% பேர் தொழில் வரிக் கொள்கை எளிமையாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்பு செய்திகள் : அமித்ஷா இயக்குநராக உள்ள வங்கியில் 4 நாளில் 754.59 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் டெபாசிட்